உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

இளங்குமரனார் தமிழ்வளம் 12

'பூத்தலை அறாஅப் புனைகொடி முல்லை

நாத்தழும் பிருப்பப் பாடா தாயினும்

கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த பரந்தோங்கு சிறப்பிற் பாரி”

போன்றவரும்,

“பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தலென் நாடிழந் ததனினும் நனியின் னாதென வாள்தந் தனனே தலையெனக் கீயத்

தன்னிற் சிறந்தது பிறிதொன் றின்மையின்

وو

புறம். 200

புறம். 165

என்று புகழப்பெறும் தலைக்கொடையாளி குமணன் போன்ற வரும் வரலாற்றில் காணற்கு அரியரே என்பதில் ஐயமுண்டோ? ஆதலின் அப் படிமுறை வளர்ச்சிப் படியே, வீரரையும் சொல் வன்மையரையும் வள்ளன்மையரையும் வைத்து ஓதினார் என்க.

“ஏசி இடலின் இடாமை நன்று” என்பராகலின் எள்ளாது ஈதலை எடுத்தோதினார். காணாது ஈத்த பரிசினைக் கைக் கொள்ள விரும்பாமல் வெறுத்துச் செல்லும் பெருஞ்சித்திரனார்,

66

காணா தீத்த இப்பொருட் கியானோர் வாணிகப் பரிசிலன் அல்லேன் பேணித் தினைஅனைத் தாயினும் இனிதவர் துணையள வறிந்து நல்கினர் விடினே

புறம். 208

என்றும், அவர் தகுதியை அறிந்து வரவேற்று உவகை கூராமல் வழங்கிய கொடையைப் பெற மறுத்து,

“பருகு வன்ன வேட்கை இல்வழி

அருகில் கண்டும் அறியார் போல

அகனக வாரா முகனழி பரிசில்"

- புறம். 207

என்று கூறி வெறுத்தும் சென்றார். இதனான் அன்றே பொய்யா மொழியார்.

66

இகழ்ந்தெள்ளா(து) ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம் உள்ளுள் உவப்ப துடைத்து”

குறள், 1057.)