உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

49

"வேற்றானை வெள்ளம் நெரிதர ஆற்றுக் கடும்புனற் கற்சிறை போல நடுங்காது நிற்பவன்”

என்றார் இந்நூலுடையார் (தகடூர். 22).

தன் ஆள் வெள்ளம் போயிற்று; தன்மேல் பகைவர் வாள் வெள்ளம் வருகின்றது. அதனைக் கற்சிறைபோல் (அணைபோல்) நின்று தடுத்து ஆடல் கொள்ளும் ஆண்மை அரிதேயாம். இத்தகைய வீரர் விரல்விட்டு எண்ணத்தக்க அளவினரே ஆவர்.

இத்தகைய வீரரையும் வீறுகொண்டு எழுமாறு செய்தவர் வியத்தகு நாவன்மையாளர் என்பதை நானில வரலாறு நன்கு காட்டும். போர்க்குக் கிளம்புமுன் வேந்தரும் படைத்தலைவரும் கூறும் வஞ்சின உரை என்னும் நெடுமொழி நாவீறு காட்டும் நன்முத்திரை என்பதற்கு எட்டுணையும் ஐயமின்று. அந் நாவீறு காப்பியப் பொருளுக்குக் கவின் செய்வதாய் அமைந்துள்ள தன்மையைப் புறநானூறு முதலாகிய வீரகாவியங்களில் கண்டு உணர்க. விரிப்பின் வரம்பின்றிப் பல்கும் எனக் கொள்க.

66

“ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை

நாகம் உயிர்ப்பக் கெடும்

திருக். 763.

என்றும் வீரமாண்பினை வெளிப்படுத்தினார் திருவள்ளுவர்.

66

காணாமல் வேணதெலாம் கத்தலாம் கற்றோர்முன் கோணாமல் வாய்திறக்கக் கூடாதே - நாணாமல் பேச்சுப்பேச் சென்னும் பெரும்பூனை வந்தக்கால்

கீச்சுக்கீச் சென்னும் கிளி”

என்று சொலல்வல்லார் திறத்தினைச் சொன்னார் ஔவையார்.

ஆயினும் அவ்வீரரினும், சொல்லாளரினும்,

“உடாஅ போரா ஆகுதல் அறிந்தும்

படாஅம் மஞ்ஞைக் கீத்த எங்கோ கடாஅ யானைக் கலிமான் பேகன்'

போன்றவரும்.

99

புறம். 141.