உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

இளங்குமரனார் தமிழ்வளம் - 12

பெற்றவரே கற்றாருள் கற்றார் எனப் பெறுவார் என்பதும் திரு வள்ளுவர் கருத்தாம்.

66

"ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா மாற்றங் கொடுத்தற் பொருட்டு"

திருக். 725.

என்றும்,

66

'கற்றாருள் கற்றார் எனப்படுவோர் கற்றார்முன்

கற்ற செலச்சொல்லு வார்”

என்றும் வரும் குறள் மணிகளை உன்னுக.

திருக். 722.

னிப் படைத்திறமும் சொற்றிறமும் பயிற்சியால் நிரம்பப் பெறுவன; ஒருவன் முயன்று முயன்று பெருக்கிக் கொள்ளக் கூடுவன; ஆனால், கொடைத்தன்மை வழிவழியாக வரும் பிறவித் தொடர்பு என்றும், உயிரிரக்கத்தான் உண்டாவது என்றும் கூறுவர். இவற்றை ஒருவாற்றான்,

“சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம்; வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் ; - நித்தம் நடையும் நடைப் பழக்கம் ; நட்பும் தயையும் கொடையும் பிறவிக் குணம்”

என்று ஔவையார் விளக்கினார்.

தன் உடைந்த படைக்கண்ணே ஒரு படைத்தலைவன் சென்று நின்று அங்ஙனந் தன் படையைக் கெடுத்த மாற்று வேந்தன் படைத்தலைவனை எதிர்கொண்டு, அவன் படையை ஆற்றலொடு தாங்குதல் ‘எருமைமறம்' என்று சிறப்பித்துப் பெறும், இதனை,

66

ஒருவனை ஒருவன் உடைபடை புக்குக்

கூழை தாங்கிய எருமை

என்றார் ஆசிரியர் தொல்காப்பியனார். (தொல். புறத். 17.)

66

இத்துறைக்கு,

"கடுங்கண் மறவன் கனல்விழியாச் சீறி

நெடுங்கைப் பிணத்திடை நின்றான் - நடுங்கமருள் ஆள்வெள்ளம் போகவும் போகான்கை வேலூன்றி வாள்வெள்ளம் தன்மேல் வர

என்று சான்று காட்டினார் ஐயனாரிதனார். (புறப். வெண். 139)