உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

பட்டதடா என்மார்பில் பார்த்திபா நின்குலத்தைச்

சுட்டதடா என்வாயிற் சொல்'

என்னும் கம்பர்வாக்கானும் அறியலாம்.

47

வில்லாற்றலில் வலியதாம் சொல்லாற்றலினும் கொடை

யாற்றலே உயர்ந்தது என்பதை,

66

"ஆர்த்தசபை நூற்றொருவர் ஆயிரத்தொன் றாம்புலவர் வார்த்தை பதினா யிரத்தொருவர் - பூத்தமலர்த் தண்டா மரைத்திருவே தாதாகோ டிக்கொருவர் உண்டாயின் உண்டென் றறு”

என்னும் ஔவையார் வாக்கான் அறியலாம்.

இவண் சொல்லப் பெற்ற முப்பொருள்களும் பெருமிதம் என்னும் மெய்ப்பாடு தோன்றுதற்கு நிலைக்களமானவை. இம் மூன்றனாலும் உண்டாகக் கூடிய இசை என்னும் புகழும் ஒரு நிலைக்களமே.

“கல்வி தறுகண் இசைமை கொடையெனச் சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே”

என்றார் ஆசிரியர் தொல்காப்பியனார்.

இவண் கல்வியை உரைத்தது கொண்டு சொல்வன்மையை உரைத்தாராகக் கோடல் தகுமோ எனின் தகும் என்க. என் னெனின், சொல்வன்மை இல்லார்.

“இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்ற(து) உணர விரித்துரையா தார்”

- திருக். 650

என்றும்,

“பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள் நன்கு செலச்சொல்லா தார்”

- திருக். 728.

என்றும்,

“கல்லா தவரிற் கடையென்ப கற்றறிந்தும்

நல்லார் அவையஞ்சு வார்”

- திருக். 729.

என்றும் பொய்யாமொழி புகலும் ஆகலின்.

மேலும், கற்பதே அவையஞ்சாது சொல்லும் ஆற்றல்

பெறுவதற்கே என்பதும், கல்வியுடன் க

சொல்வன்மையும்