உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

“யானோ அரசன்? யானே கள்வன்”

55

எனக் கூறி அரியணையில் இருந்து வீழ்ந்து ஆவி துறந்தான். அதனால் அன்றோ அவன் செய்தியை மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் வழியாகக் கேள்வியுற்ற செங்கோல் வேந்தன் செங்குட்டுவன்,

“எம்மோ ரன்ன வேந்தற் குற்ற

செம்மையின் இகந்தசொற் செவிப்புலம் படாமுன் உயிர்பதிப் பெயர்த்தமை உறுக ஈங்கென வல்வினை வளைத்த கோலை மன்னவன் செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோல் ஆக்கியது”

என்று கூறினான். இவற்றை நோக்கக்,

“காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்

மீக்கூறும் மன்னன் நிலம்

- திருக். 386.

என்னும் திருக்குறளுக்கு விரிவுரை என்னத் திகழ்தல் கண்டு கொள்க.

66

இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்

உறைகடுகி ஒல்லைக் கெடும்”

என்று இன்னாச் செயலின்கேடும்,

திருக். 564.

“குடிதழீஇக் கோலேச்சும் மாநில மன்னன்

99

அடிதழீஇ நிற்கும் உலகு

திருக். 544.

என்று ஆள்வோன் குடிதழுவி நின்றால் மக்கள் அவன் அடி தழுவி நிற்கும் நலனும்,

"இறைகாக்கும் வையக மெல்லாம் அவனை

முறைகாக்கும் முட்டாச் செயின்

- திருக். 547.

என்று செய்வினைப் பயனே செய்தாற்கு மீண்டுவரும் பாங்கும் அறநூல் கூறிற்று ஆகலின்,

“யார்கண்ணும் இன்னாத வேண்டா"

மன்னர் என்றார்.

குடியினர் அனைவரும் படையினர் ஆகவும், படையினர் அனைவரும் குடிகாத்தோம்பும் கொள்கை யுழவர்களாகவும்