உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

இளங்குமரனார் தமிழ்வளம்

12

பண்டு தொட்டுப் பயின்று வந்த பான்மையினர் தமிழர் ஆகலின் குடிபடை’ என்னும் பொருள் பொதிந்த சொல் உண்டாயிற்று. அரசன் உறுப்பு எண்ணுமுறைக் கண்ணும்.

“படைகுடி கூழ் அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு'

என எண்ணப் படுவதாயிற்று.

“நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே

மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் அதனால்,

யானுயிர் என்ப தறிகை

வேல்மிகு தானை வேந்தற்குக் கடனே”

என்றும்,

66

வயிரவாள் பூணணி மடங்கல் மொய்ம்பினான் உயிரெலாம் தன்னுயிர் ஒப்ப ஓம்பலால் செயிரிலா உலகினில் சென்று நின்றுவாழ்

உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான்'

திருக். 381.

- புறம். 186,

-

கம்ப. பால. 177

என்றும் கூறப் பெறுமாறு ஆள்வோர் நிலைமையும் ஆளப் படுவோர் நிலைமையும் அமைந்தது. அதனால் தான்,

“கெடுக சிந்தை கடிதிவள் துணிவே

மூதின் மகளிர் ஆதல் தகுமே

மேனாள் உற்ற செருவிற் கிவள் தன்னை

யானை எறிந்து களத்தொழிந் தனனே;

நெருநல் உற்ற செருவிற் கிவள்கொழுநன் பெருநிரை விலக்கி ஆண்டுப்பட் டனனே; இன்றும்,

செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி வேல்கைக் கொடுத்து வெளிது விரித்துடீஇப் பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி

ஒருமகன் அல்லது இல்லோள்

செருமுகம் நோக்கிச் செல்கென விடுமே”

என்னும் நிலைமையும்,

- புறம். 279.