உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

“கன்னின்றான் எந்தை கணவன் களப்பட்டான்

முன்னின்று மொய்யவிந்தார் என்னையர் - பின்னின்று கைபோய்க் கணையுதைப்பக் காவலன் மேலோடி

எய்போற் கிடந்தான்என் ஏறு

99

57

புறப். வெண். 176.

என்னும் நிலைமையும் நாட்டில் விளங்கக் கூடும் என்பது முற்றிலும் உண்மை. இவற்றையெல்லாம் உள்ளடக்கிய இத் தகடூர் யாத்திரை ‘செங்கோல் வேந்தன் படை சிறுகாது' எனச் சுருங்கக் கூறிற்று.

படை சிறுகாமை இருவகைத்தாம். அவை எண்ணிக்கையால் சிறுகாமையும், எண்ணத்தால் சிறுகாமையுமாம், படை யின் வெற்றிப்பாட்டில் எண்ணிக்கையினும் எண்ணத்திற்கே

முதலிடமாம்.

“உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத் தொல்படைக் கல்லால் அரிது’

99

என எண்ணப் பெருமையையும்,

- திருக். 762.

66

'சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும் இல்லாயின் வெல்லும் படை

- திருக். 769.

என எண்ணிக்கையின் இன்றியமையாமையையும் எடுத்துக் கூறுகின்றது வள்ளுவம்.

“சிறிய படையைக் கொண்டு பெரிய படையை வெற்றி கொண்டான் ான்” என்ற என்ற செய்தியை நெப்போலியனது படைச் செய்தியாளன் வெளியிட முந்தியபோது அவனைத் தடுத்து, “வலியபடையைக் கொண்டு பெரியபடையை வென்றான் என்று திருத்திக் கூறிப் படையாற்றலை வெளிப்படுத்தியதுடன் படையின் மறைவுச் செய்தியையும் நெப்போலியன் காத்தான். இதனானும் படையின் எண்ணிக்கையினும் எண்ணத்திற்கே முதன்மை யுண்மை தெளிக.

(3)