உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.

58

இளங்குமரனார் தமிழ்வளம்

3. செங்கோன்மை - 2

இன்னிசை வெண்பா

அறம்புரிந்தன் றம்ம அரசிற் பிறத்தல் துறந்த தொடர்பொடு துன்னிய கேண்மை சிறந்தார்க்கும் பாடு செயலீயார் தத்தம் பிறந்தவேல் வென்றிப் பொருட்டு.

12

புறத். 667.

(இ-ள்) தாம் தாம் பிறந்த குடியின் போர் வெற்றியின் பொருட்டாகத் துறவியாம் தன்மையொடு, மிக நெருங்கிய உறவினால் சிறந்தவர்க்கும் தாம் செய்யத் தக்க கடப்பாடுகளைச் செய்தற்கு இயலார் ஆகலின், அரசர் குடியில் பிறத்தல் என்பது அறம் புரிந்ததன் பயன் என்பதன்று என்றவாறு.

உரிமைக்

இ -து:- "செல்வ வாய்ப்பும், ஏவல்கொள்ளும் உரிமையும், இணையில்லா இசைமையும் உடையது ஆளும் குடியில் பிறப்பது” என்று உலகோர் மதிப்பாராக, “அஃதின்று; அரச குடியிற் பிறப்பது அல்லல் மிக்கது” என்பதை அறுதியிட்டுக் காட்டுவது இப் பாட்டு.

L

(வி - ரை) அம்ம - இடைச் சொல். இரக்கப் பொருள் தந்து இவண் நின்றது.

பல்வகை வாய்ப்புக்களும், வளங்களும் பாங்குற அமைந்து கிடக்கப் பெற்றவன் அரசன்; ஆயினும் அவன் பற்றற்றவனாக வாழுதல் வேண்டும்.

சுற்றத்தால் சுற்றப்பட ஒழுக வேண்டியவன் வேந்தன்; ஆயினும் அவன் அச் சுற்றத்திற்கெனத் தான் விரும்பும் உதவி களையெல்லாம் செய்தற்குக் கூடாதவன்.

ஒப்பநாடி அத்தகவு ஒறுக்க வேண்டியவன் மன்னன்; ஆயினும் பொதுநோக்கு ஒழிந்து தகுதியறிந்து தக்கோரைப் போற்றிக் கொள்ளத்தக்கவன். ஆக ஒன்றற்கு ஒன்று முரண்பாடு கொண்ட தன்மைகளை முறை திறம்பாவண்ணம் பேணிக் காக்க வேண்டியவன் காவலன் ஆகலின்,

66

அரசில் பிறத்தல் அறம்புரிந் தன்று”

என்றார். அதற்காக ‘அம்ம!' என இரங்கினார்.

பாண்டியன் நெடுஞ்செழியன் தான் தவறு செய்ததாக உணர்ந்ததும் அரியணையில் இருந்து வீழ்ந்து உயிர்துறந்த