உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

59

செய்தியைச் செங்குட்டுவன் கேட்டறிந்து கூறியதை முன்னர்க் கண்டோம். அதன் பின்னர் அரசகுடியிற் பிறத்தலின் அவலத்தை அம் மன்னர்மன்னன் விரித்துக் கூறினான்:

"மழைவளம் கரப்பின் வான்பேர் அச்சம் பிழையுயிர் எய்தின் பெரும்பேர் அச்சம் குடிபுர வுண்டும் கொடுங்கோல் அஞ்சி மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல் துன்பம் அல்லது தொழுதக வில்”

என்பது அவன் உரை.

சிலப். 25: 100-4

தன்னைப் புகழ்வார் மாட்டுத் தனி அன்பு செலுத்தித் தழுவிக் கோடலும், தன்னை இகழ்வாரைப் பகைவர் எனக் கொண்டு வன்பு செலுத்தி அகற்றலும் உலகியல்பு. தன்னைப் பழிப்பாரை- தன் முன்னேயே தன்னைப் பழிப்பாரைத் - தழுவிக் கொள்ளத்தக்க நன்மனம் உண்டாயின் அம்மனம் பெருமனம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அம்மனம் பற்றற்ற பண்பு மனமே யாம். அம் மனம் ஆள்வோர்க்கு வேண்டும் என்பதைச் “செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு

என்னும் குறளால் குறித்தார் உள்படுகருமத் தலைவராகத் திகழ்ந்த வள்ளுவப் பெருந்தகையார்.

துன்னிய கேண்மையினர்க்கும் அவர் தகுதி நோக்காது கேண்மை ஒன்றே நோக்கித் தனிப்படப் பதவிச் சிறப்புத் தருதல் கூடாது என்பதைக்,

66

'காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல் பேதைமை எல்லாம் தரும்"

குறள். 507.

என்றார். காதன்மை என்பது பற்றுக்கோடு - தொடர்பு அன்பு. கந்து - காரணம்.

தம் உறவினரையும் நண்பரையும் அன்பரையும் பொறுப் பில் வைக்கவேண்டும் என்று கருதாமல் தக்கார் இவரெனத் தேர்ந்து அவரையே பொறுப்பில் வைத்தல்வேண்டும் என்பதும், இடித்துப் புகட்டுவோரை இனமாகக் கொள்ளல் வேண்டும் என்பதும் வள்ளுவ நெறி;