உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

இளங்குமரனார் தமிழ்வளம்

12

66

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்(து) அதனை அவன்கண் விடல்

66

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பார் இலானும் கெடும்”

66

‘இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே கெடுக்கும் தகைமை யவர்’

குறள். 517

குறள், 448

குறள். 447.

ஒரு செயலைச் செய்யுங்கால் தம் பெருமையினும் தம் குடிக்கு வரும் பெருமையே கருதத்தக்கதாம். குடிக்குப் பழி வருமாயின் தமக்கு எத்துணைப் புகழ்வருஞ் செயலாயினும் செய்தல் கூடாது என்னும் கருத்தால்,

“பிறந்தவேல் வென்றிப் பொருட்டு”

என்றார். குடியின் பெருமைக்காகத் தன் பெருமையை இழக்கவும் முந்துக என ஏவுவார் திருவள்ளுவர்.

66

'குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து மானம் கருதக் கெடும்'

என்பது அவர் வாக்கு.

- குறள். 1028.

மலையமான் திருமுடிக் காரியின் மக்களைக் கிள்ளி வளவன் யானையின் காலின்கீழ்க் கிடத்திக் கொல்லப் புகுந்தான். அந் நிலையைக் கண்ட அருளாளர் கோவூர்கிழார்,

“நீயே புறவின் அல்லல் அன்றியும்

இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை;

இவரே,

புலனுழு துண்மார் புன்கண் அஞ்சித்

தமதுபகுத் துண்ணும் தண்ணிழல் வாழ்நர்;

களிறுகண் டழூஉம் அழாஅல் மறந்த புன்றலைச் சிறாஅர் மன்றுமருண்டு நோக்கி விருந்திற் புன்கணோ உடையர்

கேட்டனை யாயின்நீ வேட்டது செய்ம்மே’

எனப் பாடி உய்யக்கொண்டதை உன்னுக.

சோழன் நலங்கிள்ளியின் தம்பி மாவளத்தானும் புலவர் தாமப்பல் கண்ணனாரும் வட்டாடுங்கால், புலவர் ஒரு