உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

61

வட்டினை எடுத்துக் கைக்கண் மறைத்தார். அதனைக் கண்டு உணர்ச்சி கொண்ட மாவளத்தான் வட்டுக்கொண்டு புலவரை எறிந்தான். அப்பொழுது புலவர் “நீ சோழன் மகனல்லை” என்று கூறினார். அதனைக் கேட்ட மாவளத்தான் தன் குடிப்பழி எனக் கொண்டு நாணினான். அப்பொழுது,

66

'ஆர்புனை தெரியல்நின் முன்னோர் எல்லாம் பார்ப்பார் நோவன செய்யலர் ; மற்றிது நீர்த்தோ நினக்கென வெறுப்பக் கூறி நின்யான் பிழைத்தது நோவாய் என்னினும் நீ பிழைத் தாய்போல் நனிநா ணினையே; தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்கும் செம்மல் இக்குடிப் பிறந்தோர்க் கெண்மை காணும் எனக் காண்டகு மொய்ம்ப காட்டினை’

புறம். 43.

என்று தாமப்பல் கண்ணனார் பாடியதைக் கருதுக. இவை குடிப் பெருமைபோற்ற வேண்டிய இன்றியமையாமையை வலியுறுத்தும்.

யாப்பமைதி:

ரண்டாம் அடி ாம் அடி இறுதிச்சீர் தனிச் சொல்லாக இன்றி ஒருவிகற்பத்தான் வந்தமையால் இப்பாட்டு ஒருவிகற்ப ன்னிசை வெண்பா ஆகும்.

4. சொல்வன்மை

(4)

தாம் எண்ணிய எண்ணம் திண்ணிதில் விளங்குமாறு திறமாகச் சொல்லும் ஆற்றல்.

5.

66

'விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின்”

பலவிகற்பப் பஃறொடை வெண்பா

சொல்லுங்கால் சொல்லின் பயன்காணும் தான்பிறர் சொல்லிய சொல்லை வெலச்சொல்லும், பல்லார் பழித்தசொல் தீண்டாமல் சொல்லும், விழுத்தக்க கேட்டார்க் கினியவாச் சொல்லானேல் பூக்குழலாய்

குறள். 648