உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

இளங்குமரனார் தமிழ்வளம் 12

நல்வயல் ஊரன் நறுஞ்சாந் தணியகலம் புல்லலின் ஊடல் இனிது.

புறத். 756.

(இ-ள்) பூக்கமழும் கூந்தலை யுடையாய்! பிறர் ஒன்றைச் சொல்லுங்கால் அவர் சொல்லிய சொல்லின் பயனை ஆராய்ந்து கொள்ள வல்லவன், தான் பிறர் சொல்லிய சொல்லை வெற்றி கொள்ளச் சொல்லும் சொல்லையும், பலரும் பழிக்கத்தக்க சொல்லைக் கலவாமல் சொல்லும் சொல்லையும், உயர்ந்த பொருளைக் கேட்பவர்க்கு இனியவாகச் சொல்லும் சொல்லையும் சொல்லானாயின் நம் மருத நிலத்தலைவனது நறுமணந் தோய்ந்த மார்பினைத் தழுவிக் கிடத்தலினும் ஊடுதலால் விலகிக் கிடத்தலே இன்பம் பயப்பதாம் என்றவாறு.

-

இ-து: பிறர் சொல்லைத் தெளியும் ஒருவன் தன் சொல்லையும் தெளிந்து கூறுதல் வேண்டும் என்பதை இப் பாட்டுச் சொல்லியது.

இது தலைவன் சிறைப் புறத்தானாக அவன்கேட்கும் அளவால் தலைவிக்குத் தோழி உரைத்த உரைபோலும்.

(வி.ரை). ஊரன் தான், சொல்லும், சொல்லும், சொல்லானேல் அகலம் புல்லலின் ஊடல் இனிது என இயைக்க.

து

சொல்லின் இலக்கணம் பலவும் செறிய இப் பாடலைப் பாடினார். பயன் மிக்கவை கூறுதல், வெல்லும் சொல்லைக் கூறுதல் பழிச்சொல் கலவாமல் கூறுதல், இனியவை தேர்ந்து வ கூறுதல் என்பவை சொல்வன்மைக் கூறுகள் என்றார் என்க.

“சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல்”

(200)

“பயனிச்சொல் பாராட்டு வானை மகனெனல்

மக்கட் பதடி எனல்”

(196)

என்றும்,

“சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை

வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து”

(645)

“சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை

இகல்வெல்லல் யார்க்கும் அரிது”

(647)

என்றும்,