உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

"பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்

திறன்தெரிந்து கூறப் படும்"

“துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் என்னைகொல் ஏதிலார் மாட்டு”

என்றும்,

"அகனமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்து

இன்சொலன் ஆகப் பெறின்

“முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம் இன்சொ லினதே அறம்

63

(186)

(188)

(92)

(93)

என்றும் முறையே இந்நான்கும் வள்ளுவத்தில் வகுத்துக் கூறப் பெற்றுள்ளமை அறிக.

66

பயன் மிக்கவை கூறுதல், “பயனிலசொல்லாமை” என்னும் அதிகாரத்திலும், வெல்லும் சொல்கூறுதல், “சொல்வன்மை” அவையறிதல்" அதிகாரங்களிலும், பழிச்சொல் கலவாது கூறுதல், “புறங்கூறாமை” “அடக்கமுடைமை" அதிகாரங்களிலும், இனியவைகூறுதல், “இனியவை கூறல்” என்னும் அதிகாரத்திலும் விளக்கப் பெறுதல் கண்டு கொள்க.

"தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு

என்று வள்ளுவமும், “பல்லக்கு ஏறுவதும் சொல்லாலே பல் உடைபடுவதும் சொல்லாலே" என்று வழங்கு மொழியும் கூறுதலால் “பழித்தசொல் தீண்டாமல்” என்று கூறினார்.

விழுத்தக்க என்பது விழுப்பம் அமைந்தவற்றை. விழுப்ப மாவது மேன்மை. சொல் விழுத்தக்கதாகவும் இனிமையான தாகவும் இருத்தல்வேண்டும் என்றார். இன்சொல் என்பதன் இலக்கணமே அஃதாகலின். என்னை இலக்கணம் எனின்,

"இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்”

என்பது.

– திருக். 91

ஊட லாகிய உரிப்பொருட்கு உரியது மருதநிலம் ஆகலின் “நல்வயல் ஊரன்' என்றார். அகலம் - மார்பு. புல்லல் - தழுவுதல். -