உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

இளங்குமரனார் தமிழ்வளம்

12

புல்லுதல் காதலர்க்கு இன்பம் பயக்கும்; ஊடுதல் இன்பம் வளர்க்கும். ஊடுதல் நீடிக் கூடுதல் ஒழியுமாயின் அவ்வூடுதல் இன்ப நுகர்வுக்குக் கேடுதரும்; ஆதலால் தான்,

“உப்பமைந் தற்றாற் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல்”

என்றும்,

திருக். 1302

66

ஊடி யவரை உணராமை வாடிய

வள்ளி முதலரிந் தற்று”

என்றும் திருக்குறள் கூறிற்று.

- திருக். 1304.

இன்பம் நெடிது நிலைத்துப் பெருக ஊடுதல் துணை செய்தலால் அஃது இன்பப் பொருளாகும். இல்லாக்கால் ஊடல் இணையற்ற துன்பப் பொருளேயாம். அதனால் அன்றோ தம்நூலின் இறுதிக் குறளாக,

66

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின்”

என்று கூறினார் பெருநாவலர்.

புல்லலின் ஊடல் இனிது என்றது,

திருக். 1330

66

சாதலின் இன்னாதது இல்லை இனிததூஉம் ஈதல் இயையாக் கடை

- திருக். 230. என்னும் இடத்தில் இன்னாத சாவும், ஈதற்கு இயலாத இன்னாப் போதில் இன்பம் தருவது என்றாற்போல், தழுவிக்கிடக்கும் கூடல் இன்பத்திலும் தகைமை இல்லானை விலகிக்கிடக்கும் ஊடலே இன்பம் மிக்கது என்றார் என்க.

5. தூது - 1

(5)

மாறுபட்டு நின்றார் இடையே சென்று அமைதிப் ட படுத்தும் அமைச்சர் அறிஞர் ஆகியோர் இயல்பு கூறுவது தூதாகும்.

“தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி

நன்றி பயப்பதாம் தூது

وو

- குறள். 685.