உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

இன்னிசை வெண்பா

6.

கால வெகுளிப் பொறைய கேள் நும்பியைச்

சாலுந் துணையும் கழறிச் சிறியதோர்

65

கோல்கொண்டு மேற்சேறல் வேண்டா; அதுகண்டாய் நூல்கண்டார் கண்ட நெறி.

புறத். 776.

இ.ள்) காலனே வெகுண்டு வருவதுபோல வெகுளும் சேர வேந்தே! யான் கூறுவதைக் கேட்பாயாக. நின்தம்பியைமிக்க அளவில் இடித்துரைத்துச் சிறியதோர் கோலைக்கொண்டு தாக்குதற்காக மேற் செல்லுதல் வேண்டா. அவ்வாறு செல்லாமையே . அறநூல் கண்டவர் கண்ட அறமுறையாகும் என்றவாறு.

-

இ -து: வெகுளுதல் வேண்டா ; அமைதி கொள்க என்பதாம்.

(வி. ரை) “பொறைய, நும்பியைக் கழறிக் கோல்கொண்டு சேறல் வேண்டா” என இயைக்க.

பொறையன் - சேரன். பொறை - மலை. சேரநாடு மலைநாடு ஆதலால் அந் நாட்டின் வேந்தன் பொறையன் எனப் பெற்றான். பொறையன் என்பது சேரர் குடிப்பெயருள் ஒன்றுமாம்.

ஈண்டுப் பொறையன் எனப்பெற்றவன் பெருஞ்சேரல் ரும்பொறை என்பான். அவன் அதியமானின் தகடூர்மேல் படை கொண்டு சென்று அத் தகடூரை அழித்தமையால் ‘தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை' எனப்பெற்றான். இவன் பதிற்றுப் பத்துள் எட்டாம் பத்திற்கு உரியவன். அரிசில் கிழாராலும் மோசிகீரனாராலும் பாடப் பெற்றவன். முரசு கட்டிலில் படுத்த மோசி கீரனார்க்குக் கவரிகொண்டு வீசிய காவலன் இவனே. இவன் தம்பி அதியமான் எழினி என்பான். இவன் அண்ணன் தம்பியர் என்பது வரும் பாடலாலும் (7) புலப்படும்.

பொறையன் காலன்போன்ற வெகுளியன் என்றார். அதியமானைக் "கூற்றத் தனையை" ஒளவையார்

(புறம். 98) கூறியது இவண் கருதத்தக்கது.

66

காலன் வெகுண்டு வருதலை.

“வருங்காலன் பெருங்கால வலயம் போலும்,

என்று

செந்தறுகண் வெள்ளெயிற்றுக் கரியகோலம்"

என்றார் சேக்கிழார் அடிகள்.