உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

இளங்குமரனார் தமிழ்வளம்

12

நும்பி என்பது நும்பின் என்பதன் கடைக்குறை, நும்தம்பி என்பதன் மரூஉ என்பாரும் உளர். கழறுதல் -இடித்துரைத்தல் தலைவன் உரையை இடித்துரைக்கும் தோழன் உரையைக் ‘கழற்றுரை’ என்றும், அவனைத் தலைவன் இடித்துரைத்தல் கழற்றெதிர்மறை' என்றும் வரும் அகப்பொருள் துறைகள் ப்பொருளை வெளிப்படுத்தல் அறிக.

இடித்துரைத்தல் இன்றியமையாதது, அதன் நோக்கம் திருந்துதற்காகக் கூறுவதாய் அமையவேண்டும், வருந்துதற்காக மட்டும் கூறுவதாய் அமைதல் கூடாது. சான்றோர் உரை முன்வகையைச் சார்ந்தது. சால்பிலார் இடித்துரை பின் வகையைச் சார்ந்தது.

உடன்பிறந்தார் இடையே உறுசினமும் ஊறும் உண்டாதல் வேண்டா என்னும் உயர்பேர் எண்ணத்தால் உண்டாகிய இடித்துரை இஃது. ஒன்றுபட்டுக் குடிப்பெருமை காத்தல் வேண்டும் என்பது குறிக்கோள். "கோல் கொண்டு சேறல் வேண்டா" என்று கூறினும், அது தொல்பழஞ் சான்றோர் வழிமுறை என்று வலியுறுத்தினார். பிரிந்தார்ப் புணர்த்தலும், பகைவரைச் சந்து செய்தலும் சான்றோர் நெறி ஆகலின். இதனைப் புறப்பாடல்களும், தொடர்நிலைச் செய்யுட்களும் நன்கனம் வலியுறுத்தும்.

வ்வாறே சங்கச் சான்றோர் கணியன் பூங்குன்றனாரும், "ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம்

என்று கூறித் தம்கருத்துக்கு வலுவூட்டினாராதல் அறிக.

சாழன் நெடுங்கிள்ளியும், நலங்கிள்ளியும் ஆகிய தாயத்தார் போர்க்களம் நண்ணிப் பொருது நின்ற காலையில் புல்லாற்றூர் எயிற்றியனார் என்னும் சங்கச் சான்றோரும். கோப்பெருஞ்சோழன் மைந்தரொடு மாறுகொண்டு போர்க் களம் நண்ணிய காலையில் கோவூர்கிழார் என்னும் சங்கச் சான்றோரும், அதியமானொடு மாறு கொண்ட தொண்டை மானுழைச் சென்று அவன் படைக்கலக் கொட்டில் காட்டிய போழ்தில் நயமுறக் கூறிய ஒளவையார் என்னும் புலவர் பெரு மாட்டியாரும் புகன்ற நல்லுரைகள் புறநானூற்றுக்குப் பொலி வூட்டுதலைக் கண்டு கொள்க.