உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

67

அரசியல் வாழ்விலே மட்டுமன்றிக் குடும்பவாழ்வினும், பொதுவாழ்வினும் வெகுளி கூடாது என்பதைத் திருக்குறளில் உள்ள 'வெகுளாமை' அதிகாரத்தால் உணர்க. சான்றோர் உள்ளம் வெகுளி, வசைமொழி, அடிதடி என்பவற்றைத் தாங்கிக் கொள்ளாமல் பரிந்து உருகும் என்பதை வள்ளலார் அருட் பாடல்களில் தெள்ளிதில் கண்டுகொள்க.

"தொகுப்புறு சிறுவர் பயிலுங்கால் பயிற்றும் தொழிலிலே வந்தகோ பத்தில்

சகிப்பிலா மையினால் அடித்தனன் அடித்த தருணம்நான் கலங்கிய கலக்கம்

வகுப்புற நினது திருவுளம் அறியும் மற்றுஞ்சில் உயிர்கள் கோபம்

மிகப்புகுந் தடித்தும் பட்டபா டெல்லாம் மெய்யநீ அறிந்ததே அன்றோ.”

“உரத்தொரு வருக்கொருவர் பேசியபோ

துள்ளகம் நடுங்கினேன் பலகால்

கரத்தினால் உரத்துக் கதவுதட் டியபோ

தையவோ கலங்கினேன் கருத்தில்

புரத்திலே அம்மா அப்பனே ஐயோ

எனப்பிறர் புகன்றசொல் புகுந்தே தரத்தில்என் உளத்தைக் கலக்கிய கலக்கம் தந்தைநீ அறிந்தது தானே”

“என்னையும் இரக்கம் தன்னையும் ஒன்றாய்

இருக்கவே இசைவித் திவ்வுலகில்

மன்னிவாழ் வுறவே வருவித்த கருணை வள்ளல்நீ நினக்கிது விடயம் பன்னல்என் அடியேன் ஆயினும் பிள்ளைப் பாங்கினால் உரைக்கின்றேன் எந்தாய்

இன்னவா றெனநீ சொன்னவா றியற்றா

திருந்ததோர் இறையும்இங் கிலையே'

(6)