உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7.

68

இளங்குமரனார் தமிழ்வளம்

5. தூது -2

நேரிசை யாசிரியப்பா

ஒளிவிடு பசும்பொன் ஓடை சூட்டிய

வெளிறில் வெண்கோட்ட களிறுகெழு வேந்தே!

வினவுதி யாயின் கேண்மதி சினவா (து)

ஒருகுடர்ப் படுதர ஓரிரை துற்றும்

இருதலைப் புள்ளின் ஓருயிர் போல

அழிதரு வெகுளி தாங்காய்; வழிகெடக் கண்ணுறு பொழுதில் கைபோல் எய்தி

12

நும்மோர்க்கு, நீதுணை ஆகலும் உளையே; நோதக

முன்னவை வரூஉம் காலை நும்முன் நுமக்குத்துணை யாகலும் உரியன்; அதனால் தொடங்க உரிய வினைபெரி தாயினும்

அடங்கல் வேண்டுமதி அத்தை! அடங்கான் துணையிலன் தமியன் மன்னும் புணையிலன் பேர்யா றெதிர்நீந்தும் ஒருவன் அதனைத் தாழ்தல் அன்றோ அரிது; தலைப்படுதல் வேண்டிற் பொருந்திய

வினையின் அடங்கல் வேண்டும்

அனைய மாகீண் டறிந்திசி னோர்க்கே.

புறத். 785.

இ ள்) ஒளிவிடும் பசும் பொன்னால் செய்யப் பெற்ற நெற்றிப் பட்டத்தை ஓடைக்கண் சூட்டிய திண்ணிய வெண் தந்தத்தினைக் கொண்ட களிற்றினையுடைய வேந்தே, நிகழ்வது யாது என வினவுதல் உடை யையாயின் யான் கூறுவதைச் சினமின்றிக் கேட்பாயாக; ஒரே குடலிற் புகுமாறு ஓர் இரையைத் தின்னும் இரண்டு தலைகளைக் கொண்ட பறவையின் ஒரே உயிர் போன்ற உடன்பிறந்தானைக் கொன்றழிக்கும் வெகுளியை அடக்கினை அல்லை; உடலிற் படவந்த அடியைக் கைபோய்த் தாங்கிக் கொள்வதுபோல், குடிவழிக்குக் கெடுநிலை உண்டாம் பொழுதில் விரைந்து சென்று நும்மவர்க்கு நீ துணை ஆதற்கும் உரியை; அவ்வாறு முற்கூறிய துயர் நுமக்கு வருங்காலை நும் முன்னோன் நுமக்குத் துணையாதற்கும் உரியன். ஆதலால், நீ செய்யத் தொடங்கிய செயல் பெரிதே எனினும் இன்னே அடங்குதல் வேண்டும்; அன்றி, அடங்காதவனாகவும், துணை