உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

69

யற்றவனாகவும், தமியனாகவும், வாய்த்த மிதவை இல்லாதவ னாகவும் நீர்ப் பெருக்குடைய ஆற்றை எதிர்த்து நீந்தும் ஒருவன் அதனைக் கடந்து சேறல் அன்றோ அரிது; ஆதலால் அவனொடும் ஒன்று பட்டு வாழ்தலை விரும்பினால் இப்பொழுது மேற் கொண்டுள்ள போர்வினையை ஒழிந்து அடங்குதல் வேண்டும்; நின்னை அறிந்தோர் மகிழ நீ அத் தன்மையுடைய ஆவாயாக என்றவாறு.

து: து - தாயத்தாராகிய நீங்கள் பகை காண்டு பொருகளத்து நிற்பது நும்குடிக்குப் பெருமை தருவது அன்று; அடங்கி அமைக என்பது.

(வி- ரை) இளவலும் மூத்தவனும் ஆகிய இருவரும் பொருகளத்து நின்றனர் என்றும், அவரைச் சந்து செய்வான் வேண்டிப் புலவர் புகன்றனர் இப் பாடலை என்றும், ‘நும்முன்’ என்றதால் இளையவனிடம் கூறியது இஃது என்றும் அறியலாம்.

6

அதியமான் பொருது வீழ்ந்த எழினியை நோக்கிக் கூறிய தாகலாம். தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை மூத்தவன் ஆகலின். இவ்விருவரும் ஒருகுடிப் பிறந்தவரே அன்றி உடன் பிறந்தார் அல்லர் என்பர். ஆனால், “ஒருகுடர்ப் படுதர ஓரிரை துற்றும் இருதலைப் புள்ளின் ஒருயிர் போல" எனவரும் உவமை உடன்பிறந்தாரே என்று கருதுமாறு வைக்கின்றது.

ஓடையாவது நெற்றிப் பள்ளம்; மாடு மான் முதலிய வற்றுக்கும் ஓடை உண்டாயினும் யானையின் படலமான நெற்றியில் அமைந்த ஓடை விளக்கமாகப் புலப்படுதல் உண்மை. நிலத்தை ஊடறுத்துக் கொண்டு நீர் செல்வதால் அமைந்த ஓடை போன்றது நெற்றிப்பள்ளம் ஆகலின் காரணக் குறி ஆயிற்று. இஃது இப் பொருட்டாதலை,

66

ஓடையே ஓடையே ஓடையே ஓடையே

கூடற் பழனத்தும் கொல்லி மலைமேலும்

மாறன் மதகளிற்று வண்பூ நுதல்மேலும்

கோடலங் கொல்லைப் புனத்தும் கொடுங்குழாய் !

நாடி உணர்வார்ப் பெறின்”

என்னும் யாப்பருங்கலவிருத்தி மேற்கோள் (51) செய்யுளாலும் அறிக.

வளிறு

-

.

-

இளமை. வெளிறில் இளமை இல்லாத ; என்றது முதிர்வை. தந்தத்திற்கு முதிர்ச்சி வன்மை ஆகலின்