உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

இளங்குமரனார் தமிழ்வளம் 12

'திண்ணிய' என்றாம். யானை பிணிக்கப் பெற்ற கட்டுத் தறியை, 'வெளிறில் நோன்காழ்” என்று கூறுகின்றது புறப்பாட்டு (23).

66

சினம்

தன்னையுடையானை

அழித்தலும், அவன் இனத்தையும் அழித்தலும் உடைமையின் ‘சினவாது கேண்மதி’ என்றார்.

66

சினம் தன்னையுடையானை அழித்தல்.

'தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்”

என்பதனாலும், சேர்ந்தாரைக் கொல்லுதல்,

“சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புணையைச் சுடும்

என்பதனாலும் அறிக.

I

குறள். 305.

- குறள். 306.

தலைகள் இரண்டேனும் குடர் ஒன்றாகவும் உயிர் ஒன்றாகவும் வாய்த்த புள் ஓரிரையைத் தின்னுமாயின் அவ்விரை நச்சுத் தன்மை உடைய தாயின் எவ்வொரு தலைக்கண் அமைந்த வாயால் தின்றாலும் என்? புள்ளுக்குக் கேடும் இறந்துபாடும் ஆமன்றே என்னும் நயமிக்க உவமையால் குடிப்பிறப் பருமையும் அஃதுணராதழிவு சூழும் வெகுளிக் கெடும் விளங்கவுரைத்தார்.

ஆசிரியர் மதுரை மருதனிள நாகனார், தலைவி

புலத்தற்கண் தலைவன் கூற்றாக,

66

ஒருயிர்ப் புள்ளி;ன இருதலை யுள்ளொன்று போரெதிர்ந் தற்றாப் புலவல்நீ கூறினென் ஆருயிர் நிற்குமா றியாது”

கலித். 89.

என்று கூறியதூஉம், அதற்கு நச்சினார்க்கினியர், “உடலும் உயிரும் ஒன்றாய்த் தலை இரண்டாகிய புள்ளினுடைய ய அவ்விரண்டு தலையில் ஒருதலை மற்றத் தலையோடே போர் செய்தலை மேற்கொண்ட தன்மைத்தாக நீ இக் கொடுமைகளைக் கூறிப் புலந்தாற் பயனென்? அதனைக் கைவிட்டு, இனி என்னுடைய அரிய உயிர் நிற்கும் வழி யாது? அதனைக் கூறுவாய் என்றான்” என்று உரைவகுத்ததூஉம் அறிக.

னி

இருதலை கவைத்தலை எனவும் பெறும். தலை இரண்டும் உடல் ஒன்றும் அமைந்த மகவு ‘கவை மகவு' எனப்பெறும். கவை