உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

71

மகவின் உவமைப்படுத்திய புலவர் பெருமகனார் கவை மகனார் என வழங்கப் பெற்றனர் (குறுந். 324).

66

“கவைமக நஞ்சுண் டாஅங்

கஞ்சுவல் பெருமஎன் நெஞ்சத் தானே

என்பது அவர் வாக்கு.

وو

இளஞ்சிறார் கல் ஏவி விளையாடுதற்குப் பயன்படுத்தும் கவண், கவணை, கவட்டை என்னும் பெயருடைய கருவியை அறிக. ஒரு மரக்கொம்பு இரண்டாகப் பிரிவதைக் கவட்டை என்று வழங்குவதையும் இரு தொடைப் பொருத்துவாயைக் கவடு என்பதையும் கருதுக. உள்ளொன்று வைத்துப் புறமொன்று சொல்லி இருநெறிப்படச் செல்லும் தன்மை ‘கவடு' என்று வழக்கில் உண்மையைக் உண்மையைக் கண்டு தெளிக. பாம்பின் பிளவு பட்ட நா, 'கவைநா' என கவைநா’ என இலக்கிய வழக்கில் உண்மையும் கொள்க.

அழிதரு வெகுளி என்பதற்கு ஏற்பப் பறவை நஞ்சுணவு தின்றதாகக் கொள்ளப் பெற்றது. வியப்புறு பிறப்பினராகப் பிறந்த அசாமிய இரட்டையர் இறப்புச் செய்தியை எண்ணி இவ்வுவமையின் மாண்பை இனிதின் உணர்க.

புள், கணந்துள் என்னும் ஒரு பறவை. (சிலப். 10: 117. அடியார்க்) இனிப் பறவைப் பொதுவுமாம். துற்றுதல் தின்னுதல். “துற்றுவ துற்றும்” என்பது பரிபாடல் (20:51.)

குடிநலங்காத்தல் உயர்ந்தோர் கோட்பாடு ஆகலின், “வழிகெ எய்தி' என்றார். வழியாவது குடி வழி.

கைபோல் உதவுதலை, “உடுக்கை இழந்தவன் கைபோல்" என இயைத்துக் கொள்க. தன்மெய்க்கண் படவரும் அடியினைத் தான் சென்று காக்கும் தகைமைத்தாம் கையொடும் இணைத்துக் காண்க. இதனை,

“பேரறிஞர் தாக்கும் பிறர் துயரம் தாங்கியே வீரமொடு காக்க விரைகுவார் - நேரிழாய்

மெய்சென்று தாக்கும் வியன்கோல் அடிதன்மேல்

கைசென்று தாங்கும் கடிது

என்னும் நன்னெறியால் தெளிக.

-

முன்னவை முன்னே கூறியவை. நின் முன்னோனுக்கு வந்தாற்போல் நினக்குத் துயர் வருமாயினும் நின் முன்னோனும்