உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

இளங்குமரனார் தமிழ்வளம்

12

நின்னைப் போலவே விரைந்து வந்து நினக்குத் துணையாவான் என்பாராய்.

நோதக, முன்னவை வருஉங்காலை நும்முன்

நுமக்குத் துணையாகலும் உரியன்

என்றார்.

தொடங்கற்கு உரிய வினை நாட்டொடு நாட்டிடைப் பட்டவினை ஆகலானும், எண்ணற்றோர் அழிவுக்கு வித்து ஆகலானும், இடைகொட்க எண்ணுதற்குக் கூடாததாய்க் கடை கொட்க எண்ணிச் செயற்படற்கு உரியது ஆகலானும், "தொடங்க உரியவினை பெரிது” என்றார்.

வேந்தன் வெகுண்டு நின்றான் ஆகலின் அடக்கல் வேண்டும் என்னாராய் அடங்கல் வேண்டும் என்றார். அவன் உற்றார் உழையரை அமைதிப்படுத்த வேண்டினார் எனின் அடக்கல் வேண்டும் எனப் பிறவினை பெய்திருப்பார். அவன் அடங்குதல் ஒன்றே அவன்வழி நிற்கும் வீரர் அடங்குதற்கு வகை என்பதை உணர்ந்தார் ஆகலின் இவ்வாறு ஓதினார்.

மதி: வியங்கோள் ஈறு. அத்தை முன்னிலைக்கண் வரும் அசைநிலை.

உடன்பிறந்தாராய இருவர்தம் வலிமையும் துணை வலிமையும் உள்ளவாறு அறிவார் ஆதலானும், இளையவன் தன் மூத்தான் ஆற்றலை முழுதறிவான் ஆதலானும் வெளிப்பட உரைக்கும் விருப்பினராய்,

66

அடங்கான், துணையிலன், தமியன், மன்னும் புணையிலன் பேர்யாறு எதிர்நீந்தும் ஒருவன் அதனைத் தாழ்தல் அன்றோ அரிது” என்றார்.

பேரியாற்றைக் கடக்க விழைவாற்குச் சீரிய புணை வேண்டும்; புணைமட்டும் போதாது. புணையை இயக்கும் வினைத்திறம் வாய்ந்தானும் வேண்டும். அந் நிலையினும் ஊறுபாடுறுமாயின் உதவுதற்கு உழுவலன்பரும் வேண்டும். இவற்றுள் எவ்வொன்றும் இல்லான் பேர் யாற்றை நீந்திக் கரையேறுவான் கொல்? என்று வினவுவாராய் உண்மை உணர்த்தி எடுத்த வினையில் அடங்க ஏவினார்.

ருவரும் பொருகளத்து உற்றனராகலின் இனித் தலைப்பட்டு வாழுதற்கு ஒல்லுமோ என்னும் ஐயுறவு உண்டாம்