உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

73

ஆகலின், அதனை அகற்றல் வேண்டித், “தலைப்படுதல் வேண்டின் பொருந்திய வினையின் அடங்கல் வேண்டும்” என்றார்.

அமைந்தாரைத் தாக்குதல் ஆடவர் நெறி அன்று ஆகலானும், ஒருவர் பொறை இருவர் நட்பு' ஆகலானும் அவ்வாறு கூறினார். தா மே அன்றியும் சான்றோர் பலரின் விழைவும் அதுவே என்பாராய்,

66

“அறிந்திசி னோர்க்கு அனையையா கீண்டு”

என்றார். சான்றோர் விழைவறிந்து நடத்தல் சால்பு என்பதைப், 'பொருளுரையாளர் நச்சுக் கொன்றேற்கு நன்னெறி யுண்டோ?” என்று கோவலன் வாக்காக இளங்கோவடிகள் இயம்புவதால் அறியலாம் (சிலப். 16: 65-6)

(7)

5. தூது - 3

8.

நேரிசை யாசிரியப்பா

மொய்வேற் கையர் முரசெறிந் தொய்யென வையகம் அறிய வலிதலைக் கொண்ட(து) எவ்வழி என்றி இயல்தார் மார்ப!

எவ்வழி யாயினும் அவ்வழித் தோன்றித் திண்கூர் எஃகின் வயவர்க் காணிற் புண்கூர் மெய்யின் உராஅய்ப் பகைவர் பைந்தலை எறிந்த மைந்துமலி தடக்கை

ஆண்டகை மறவர் மலிந்துபிறர்

தீண்டற் காகாது வேந்துடை அரணே.

புறத். 786.

(இ-ள்) கவின்மிக்க மாலையணிந்த மார்பினையுடையாய்! பறவைகள் மொய்த்து வருமாறு வேற்படை ஏந்திய கையினை யுடைய வீரர் முரசம் அறைந்து விரைந்து உலகோர் அறியுமாறு வலிமையில் மீக்கூர்ந்தது எவ் வழியால் என்று வினவுகின்றனை; அஃது எவ்வகையால் ஆயினும் அவ்வகையில் விளங்கித் திண்ணிய கூரிய வேலைக்கொண்ட பகைவீரரைக் கண்டால் விழுப்புண் கூர்ந்த உடலுடன் பெயர்ந்து சென்று அவரின் செவ்விய தலையை வீழ்த்திய வீரமிக்க பெருங்கையினை யுடைய ஆண்மை செறிந்த மறவர் பெருகிக் காத்தலால் வேந்தனது