உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

இளங்குமரனார் தமிழ்வளம்

12

அரண் பிறரால் தீண்டுதற்கு இயலாது என்பதை அறிவாயாக என்றவாறு.

இ- து:- “எம் வீரரை எளியரென எண்ணிப் பட்டழியாது முற்றுகை ஒழிந்து உய்க” என்பது.

(வி -ரை) உழிஞை மாலை சூடிப் பகைவரின் மதிலைத் தாக்க நிற்கும் படைத்தலைவனை நோக்கி 'இயல்தார் மார்ப் என விளித்துக் கூறினார். இத் தூதுரை களத்திடைக் கண்டு நேரிடைக் கழறியதாம். இதில் வயவர் என்றது உழிஞை யாரையும், மறவர் என்றது நொச்சியாரையும் ஆகும்.

66

இது து பொன்முடியார் தகடூரின் தன்மை கூறியது” என்பார் நச்சினார்க்கினியர்.

போரிடைப் பயிலும் வேல் ஆகலின் புலவு நாற்றம் உடைய தாயிற்று. அப் புலவினை வேட்டுப் பருந்து காகம் முதலாய பறவைக் கூட்டம் மொய்த்துச் செல்வன ஆகலின், 'மொய் வேற்கையர்’ என்றார்.

இனி, “வண்டுகள் மொய்க்கும் மாலையணிந்த வேல்" என்று பொருள் கொள்ளின் என் எனின், அவ் வேல் போரிடைப் பயின்றறியாப் புன்மைக்கு உரியதாய் வைத்திருந்தார்க்கும் வந்தெதிர்ந்து தாக்குவார்க்கும் பெருமை சேர்க்காத புன்மைப்பாடு உடையதாய் இழியும். ஆகலின் வண்டு மொய்த்தல் என்பது பொருந்தாது என்க.

தனை,

இவ்வே, பீலியணிந்து மாலைசூட்டிக் கண்திரள் நோன்காழ் திருத்திநெய்யணிந்து கடியுடை வியனக ரவ்வே

99

என்று தொண்டை மானுழைத் தூது சென்ற ஔவையார் அருளிய வாக்கால் தெளிக.

எழுச்சி யுண்டாகும் வண்ணம் முரசு அறைந்து ஏறு நடையிட்டு ஆர்த்துச் செல்வது வீரர் இயல்பாகலின் 'முரசெறிந்து ஒய்யென' என்றார். 'ஒய்' என்பது விரைவுக் குறிப்பு. ‘எய்' என்பதும் அத்தகு குறிப்பே.

க்

உலகெலாம் தலைவணங்கி நிற்கச் செய்யவல்லது போர் ஆற்றல் ஒன்றே என்று உழிஞை சூடி நின்ற வீரன் கூறினான் ஆகலின் அதனை உட்கொண்டவராக,