உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

75

66

வையகம் அறிய வலிதலைக் கொண்டது எவ்வழி என்றி”

என்றார்.

எவ்வழி ஆயினும் ஆகுக; அஃது இப்பொழுது ஆராய்ச்சிக்கு உரிய பொருளன்று; அதனால், வெற்றி கொள்வதற்கு இயலுமோ என்பதே ஆராய்வுக்கு உரியது என்பாராய் “எவ்வழி ஆயினும்' என்றார்.

தீக் கடை கோலைத் தேய்க்கப் பெறாக்கால் தண்ணிதாய் அமைந்து கிடக்கும்; தேய்த்த காலையில் தோன்றும் தீ; தொட்டதை எல்லாம் பற்றி எரித்துப் பாழாக்கும். அத்தகு வீரர் நொச்சியார். ஆகலின் நின் திண்ணிய வலிய வேற்படை வீரரைக் காணுங்கால் அவர் நிலை யாதாம் என்பதை அறியாயாய் அடங்கி அமைந்து நிற்கும் நிலை ஒன்றுமே எண்ணினையாய் எதிரிட்டு நின்றனை என்பாராய், ‘வயவர்க்காணின்' என்றார்.

நாளும் பொழுதும் போர்க்களமே புகழ்க் களமாகப் புகுந்து செம்மாந்து திரிவார் ஆகலின் தழும்பு என்னாராய்ப் 'புண்கூர்மெய்' என்றார். முன்னரும் ‘பசும்புண்’ என்பார். (46)

மெய்யாவது உடல். யாக்கை, உடல், உடம்பு என்னாராய்ப் பொய்யாய் ஒழியும் உடல் எனினும் தன்னையுடையான் புகழுக்கு இடனாகி உலகு ஒழியினும் ஒழியா நிலைபேற்றை வழங்கி நிலை பெறுத்தும் மாண்பு கருதி ‘மெய்’ என்றார்.

-

பைந்தலை செவ்வியதலை; வளமிக்க தலையுமாம். எறிதல் - தடிதல்; வெட்டிவீழ்த்துதல்.

மைந்து என்பது வீரம். மைந்து உடையான் யாவனோ அவன் ‘மைந்தன்' என்க. பண்டை நாள் மன்பதைக் கடமைகள் அனைத்தும் வீரத்தின் நிலைக்களம் கொண்டே அமையப் பெற்றனவாகலின் வீரம் உடையானே உ மைந்தன்' எனவும், வினையாண்மை மீக் கூர்ந்தவனே ‘ஆண்' எனவும், இடுக்கணை எள்ளி நகைத்து வெற்றி காண்பவனே 'ஆடவன்' எனவும் பொருள்பொதிந்த குறியீடுகள் அமைத்துப் பேணிக் காத்தனர்

என்க.

மதில் சுட்ட கல்லானும், உடை கல்லானும் இட்டி கையானும் கட்டப்பெற்று, அறிவரிய பொறிகளைத் தன்னகத்துக் கொண்டதாக அமைந்த சுவரே எனினும் அதனைக் ‘கன்னி'