உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

இளங்குமரனார் தமிழ்வளம்

12

எனவும் ‘குமரி' எனவும் கொண்டு பண்டை வேந்தர் போற்றிக் காத்தனர். இதனை,

66

கருதாதார் மதிற் குமரிமேல்

ஒருதானாகி இகன் மிகுத்தன்று”

என்றும்,

வணங்காதார் மதிற் குமரியொடு

மணங் கூடிய மலிபுரைத் தன்று”

என்றும் புறப்பொருள் வெண்பாமாலையால் அறியலாம்.

(107)

(122)

இதனால் மதிலைத் தீண்டுதல் என்பது தொடுதற்கு உரிமையிலாக் குமரி மகளிரைத் தொடும் குற்றத்துக்கு ஒப்பக் கொண்டு ஓம்பினர் ஆகலின், "பிறர் தீண்டற்கு ஆகாது வேந்துடை அரணே" என்றார். வலிதில் மகளைப் பற்றிச் செல்ல வருவார் உளரேல் ‘வாளா' இருப்பரோ? உயிரையும் பொருட்டாக எண்ணாது ஊக்கி நின்று தாக்குவார் என்பது இருவகை வழக்கினும் காண்டற்குரியதேயாம். இனிப் பகைவரால் தீண்டுதற்கு ஆகாத முள்வேலியை,

“குமரி மகளிர் கூந்தல் புரைய அமரின் இட்ட அருமுள் வேலி”

என்றதுவும் (புறம். 301) இவண் கருதத் தக்கது.

தீண்டுதல் - தொடுதல். பற்றுதல், கவர்ந்து கோடல் ஆகலின் அதனைக் குறிக்காது நெருங்கும் நிலையும் நேராது என்றார். நொச்சிவீரர் காட்டிய திறம் அறிந்து நுவன்றது இஃது

என்க.

66

து

(மேற்கோள்.) இப் பாடலைத் தொல். புறத்திணை இயல் 12 ஆம் நூற்பாவில் “உடன்றோர் வருபகை பேணார் ஆரெயில் உளப்பட” என்பதற்கு மேற்கோள் காட்டி இஃது அகத்தோன் செல்வம் போற்றுதற்கு ஏதுவாகிய முழு அரண் கூறுதலில் செல்வத்துள் அடங்காதாயிற்று; இது பொன்முடியார் தகடூரின் தன்மை கூறியது” என எழுதுகின்றார் நச்சினார்க்கினியர். (8)

து