உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

6. நாடு

77

நாடு - விரும்பு. உறைவாரும் பிறரும் விரும்புதற்கு உரிய தாகப் பல்வகை நலங்களும் பாங்குற அமைந்து, பதியெழு வறியாப் பண்புமேம்பட்ட பான்மையது நாடு என்பதாம்.

“நாடென்ப நாடா வளத்தன நாடல்ல

நாட வளந்தரு நாடு.'

மருட்பா

பெருநீரால் வாரி சிறக்க; இருநிலத் (து) இட்டவித் தெஞ்சாமை நாறுக ; நாறார முட்டாது வந்து மழைபெய்க; பெய்தபின் ஒட்டாது வந்து கிளைபயில்க; அக்கிளை பால்வார் பிறைஞ்சிக் கதிரீன; அக்கதிர் ஏர்கெழு செல்வர் களம்நிறைக; அக்களத்துப் போரெலாம் காவாது வைகுக; போரின் உருகெழும் ஓதை வெரீஇப் பெடையொடு

நாரை இரியும் விளைவயல்

யாணர்த் தாகவவன் அகன்தலை நாடே.

குறள். 739

புறத். 844.

(இ-ள்) எம்வேந்தனது அகன்ற இடத்தையுடைய நாடு, பெருகி வரும் நீரால் ஏரி, குளம் நிரம்பிச் சிறப்பதாக; பரந்த நிலத்தில் இடப்பெற்ற வித்து குறையாமல் முளைப்பதாக; முளைத்த நாற்றுச் செழித்து வளருமாறு முட்டுப்பாடு இல்லாமல் மழைபொழிவதாக; பொழிந்த பின்னர்ப் பயிர் பக்கம் விரிந்து தூறு செறிவதாக; அத் தூறுகள் எல்லாம், பால் பிடித்துத் தலைசாய்த்துக் கதிர் ஈனுவதாக; அக் கதிர் ஏர்வளம் சிறக்கும் உழவர்களத்தில் நிறைவதாக; அக் களத்தில் நெற்போர்கள் காவல் செய்வார் இன்றிக் கிடப்பதாக; நெற்போர், வைக்கோல் போர் ஆகியவற்றில் பொலியிடல், கடாவிடல் முதலாகச் செய்யப்படும் வினைகளால் உண்டாம் ஒலியால் அஞ்சி நாரை தன் பெட்டையொடும் அகன்று செல்லும் விளைவுமிக்க வயலின் புது வருவாய் உடையதாவதாக என்றவாறு.

-

து:- நீர்வளம் சிறப்பின் நீர்மையும் சிறக்கும் என்பதாம்.