உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

இளங்குமரனார் தமிழ்வளம்

12

(வி. ரை) வாரி என்பது கடல், நீர், வெள்ளம், மடை, வருவாய், வழி, வாயில், மதில், குழி முதலிய பொருள்களைத் தருவது ஆயினும் இவண் குளம், ஏரி, அணை முதலிய நீர்த் தேக்கங்களைக் குறித்து நின்றது. பெருநீர்ப் பெருக்கால் சிறப்புப் பெற்று, அந் நீரால் வேளாண்மை செய்வார்க்குப் பயன் படுதலின். யாணர்த்தாக விளைவயல் திகழ வேண்டுமாயின், வாரி சிறக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

சங்கச் சான்றோர் நாளிலேயே குளந்தொட்டு வளம் பெருக்குதல் கொற்றவர் கடமைகளுள் தலையாயதாகக் கொள்ளப் பெற்றது. கரிகாலன் கல்லணை கட்டியதும், அவன், “காடுகொன்று நாடாக்கிக்

குளந்தொட்டு வளம்பெருக்கி” னான்

எனக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பட்டினப்பாலையில் (283-4) கூறியதும் கருதத்தக்கன.

நீர்வளத்தால்தான் அறம் பொருள் இன்பம் ஆகிய ‘மும் முதற் பொருளும்' பெறுதற்குக் கூடும் என்பது சங்கச் சான்றோர் தெளிவு. பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடிய புலவர் குடபுலவியனார் “ஆழ்ந்து பள்ளமான இடங்களில் எல்லாம் நீரைத் தேக்கித் தடுத்து வைத்துக் கொண்டவர்களே அறம் பொருள் இன்பங்களையும் போகாமல் தடுத்து வைத்துக் அவ்வாறு நீரைத் தடுத்து வைத்துக் கொள்ளாதவர் அம் முப் பொருள்களையும் தடுத்துவைத்துக் கொள்ளாதவரே" என்றார். இதனை,

கொண்டவர்கள்.

“நிலனெளி மருங்கில் நீர்நிலை பெருகத் தட்டோர் அம்ம இவண்தட் டோரே தள்ளா தோர்இவண் தள்ளா தோரே'

புறம். 18.

-

தடுத்தோர்; தள்ளாதோர் என்று கூறினார். (தட்டோர் - தடாதோர்) "உழவினார் கைம்மடங்”காமல் உழைத்து உ உலகோம்ப வேண்டுமாயின், நீர்நிலைகள் அமைத்துப் பேணிக் காத்தல் காவலர் தம் முதன்மையான கடமையாம். ஆகலின் அதனை முதற்கண் வைத்தார்.

இருநிலம் - பெருநிலம் ; சிறந்த நிலமுமாம். "இருந்தமிழே உன்னால் இருந்தேன்” என்பதை நோக்குக. எஞ்சாமை ஒழியாமை. எஞ்சாமை நாறுதல் - இட்ட வித்தில் எதுவும் வறிதுபடாது முளைத்தல். நாறு - நாற்று.