உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

79

விளைவில் பொறுக்கி எடுத்து உலர்த்திப் பேணிக் காத்து வைக்கப் பெறுவது வித்து. ஒன்று, நூறு பன்னூறு, எனப் பயன் தருவது ஆகலின் வித்தே உழவர் கைம்முதல். எத்துணை வறுமை சூழினும் வித்தட்டு உண்பார் அரியர். அவ்வாறு உண்பார் உளராயின் அவர் ‘எதிரது காக்கும்' ஏற்றம் இல்லாதவர் எனக் கருதி எள்ளவும் பெற்றனர். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் இறந்த காலையில் ஆடுதுறை மாசாத்தனார் கூற்றுவனை விளித்து,

66

“நனிபே தையே நயனில் கூற்றும்

விரகின் மையின் வித்தட் டுண்டனை

புறம். 227.

என்றும், இத் தகடூர் யாத்திரைப் பாட்டுக்குரிய அதிய மான் தகடூர் பொருது வீழ்ந்த எழினியைப் பாடிய அரிசில் கிழார் அக் கூற்றுவனை விளித்து,

"அறனில் கூற்றம்

வாழ்தலின் வரூஉம் வயல்வளன் அறியான்

வீழ்குடி யுழவன் வித்துண் டாங்கு

ஒருவன் ஆருயிர்”

உண்டனை என்றும் பாடியதை நோக்க வித்தின் மாண்பும், அதனை அட்டுண்ணல் கேடும் புலப்படும். அத்தகைய வித்து நாறாக்கால் அதனால் ஆகும் பயனென்னை? ஆதலால், இரு நிலத்து இட்டவித்து எஞ்சாமை நாறுக” என்றார்.

“வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ்சுவற் கார்ப்பெயற் கலித்த பெரும்பாட் டீரத்துப் பூழி மயங்கப் பலவுழுது வித்திப்

பல்லி யாடிய பல்கிளைச் செவ்விக்

களைகால் கழாலிற் றோடொலிபு நந்தி மென்மயிற் புனிற்றுப் பெடைகடுப்ப நீடிக் கருந்தாள் போகி ஒருங்குபீள் விரிந்து கீழும் மேலும் எஞ்சாமைப் பலகாய்த்து வாலிதின் விளைந்த புதுவரகு

என்பது இவண் நோக்கத் தக்கது (புறம். 120.)

66

மேனீராகிய மழைநீர் இல்லாக்கால் ஊற்று நீரோ, ஆற்று நீரோ இல்லை. அன்றியும் மழைநீர் இன்றி ஊற்றையும் ஆற்றையும்