உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

இளங்குமரனார் தமிழ்வளம்

12

நம்பிப் பாடுபடினும் நோக்கும் பயன் கிட்டாது. வளமாக நீர்பெருக்கி வைத்துப் பாடுபடும் பயிருக்கும் மழை பொழிதல் இன்றேல் நோயும் வெதுப்பும் தாக்கி வளமை குன்றும். ஆகலின் 'நாறார முட்டாது வந்து மழைபெய்க' என்றார். முட்டாது

குறையாது.

66

நட்டோர் உவப்ப நடைப்பரி கார

முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கைத் துளிமழை பொழியும் வளிதுஞ்சு நெடுங்கோட்டு நளிமலை நாடன் நள்ளி"

என்பது சிறுபாண் (104 - 7)

அரிதின் முயன்று பெற்ற நீரால் விதைத்துப் பின்னை, வானை நோக்கும் நிலம் ‘புன்புலம்' ஆகும். அஃது எவ்வளவு பரப்புடையதாக இருந்தும் பயன் என்ன? முயற்சிக்கு ஏற்ற பயன் தராது. ஆதலால் அன்றோ,

66

வித்திவான் நோக்கும் புன்புலம் கண்ணகன் வைப்பிற் றாயினும் நண்ணி ஆளும் இறைவன் தாட்குத வாதே”

என்று குடபுலவியனார் விளக்கினார்.

ப்

புறம். 18.

நிலமும் நீரும் இயைந்ததன் பயன் என்னை? பயிர் பக்கம் விரிந்து கிளைத்தல் வேண்டும். பக்கம் விரிந்து கிளைத்தலைப் பண்ணை என்பர். மூங்கில்தூறு, கரும்புத்தூறு, நெற்பயிர் ஆகியவை பக்கம் செறிந்து பல்குவதைப் ‘பண்ணை' என்னும் வழக்குண்மை இன்றும் நாட்டுப்புறங்களில் அறியலாம். மகளிர் கூட்டமாகச் சேர்ந்து விளையாடும் விளையாட்டைப் பண்ணை, என்பதும், விரிந்து பரந்த நிலமுடையாரைப் பண்ணையார் என்பதும் கருதத்தக்கன. நிலவளம் நீர்வளம் சிறந்து, மழையும் முட்டாது பொழியின் பயிரின் பக்கம் விரிதல் ஒருதலை. அப்பொழுது நிலத்தைக் காணமுடியாவாறு பயிர் அடர்ந்து தோன்றுமாகலின், ‘ஒட்டாது வந்து கிளைபயில்க' என்றார். ஒட்டிய பயிர் வலுவற்றுக் கதிர் ஈனாதொழியும் ஆகலின் அவ்வாறு கூறினார். பயிர்ச் செறிவினாலும், கதிர்வளமையாலும் அன்றோ,

“தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய”

என்றும்,

மதுரைக். 11.