உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

"வேலி ஆயிரம் விளையுட் டாக”

என்றும்,

“வேலி ஆயிரம் விளைகநின் வயலே’

என்றும்,

"ஒருபிடி படியும் சீறிடம்

எழுகளிறு புரக்கும்”

என்றும் சங்கச் சான்றோர் இயம்பினர்.

81

பொருநர். 246-7.

புறம். 391.

புறம். 40.

கருக்கொண்டிருந்த நெற்பயிர் கதிர் ஈனும்; அப்பொழுது நிமிர்ந்து கதிர் நிற்கும். அதில் ‘பொட்டு’ நிரம்பி இருக்கும். அப்பொழுது மழை பொழியின் பொட்டு அழிந்து மணிபிடியாப் பதர் ஆகிவிடும். ஆதலால் மழைபொழிதலை முன்னே கூறினார்; பால் பிடித்தலைப் பின்னே கூறினார். ஈன்ற கதிரில் பால் பிடிக்கும்; பின்னே அப் பால் திரண்டு முதிரும்; திண்ணிதாகி மணியுருப் பெறும். அப்பொழுது நிமிர்ந்து நின்ற கதிர் சிறிது சிறிதாகத் தலை தாழ்ந்து படியும். இவ் வியல்புகளை யெல்லாம் 'அக்கிளை பால்வார்பு இறைஞ்சிக் கதிர் ஈன' என்பதில் செறிய யாத்தார். இறைஞ்சுதல் - தலை தாழ்தல். இக் காட்சியைச்,

“சொல்லருஞ் சூற்பசும் பாம்பின் தோற்றம்போல் மெல்லவே கருவிருந் தீன்று மேலலார்

செல்வமே போல்தலை நிறுவித் தேர்ந்த நூற்

கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே”

என்று நயமுற விரித்துக் கூறினார் திருத்தக்க தேவர் (சிந்தா. 63) ஏர்கெழு செல்வர் உழவர் ; ஏரினால் எய்திய வளமை யுடையவர் ஆகலின் இவ்வாறு கூறினார். ஏர் - உழுபடையும், எருதுமாம்.

நெல் களநிறைந்து கிடத்தலையும், திரட்டிக் குவித் திருத்தலையும்,

“களமலி நெல்லின் குப்பை

66

“குன்றுகண் டன்ன நிலைப்பல் போர்பு”

புறம். 171.

- புறம். 353.

டந்

என்றார் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார். இ

தோறும் நெற்கூடு இருத்தலை,