உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

இளங்குமரனார் தமிழ்வளம் 12

66

'மாமாவின் வயின்வயின்நெற்

றாழ்தாழைத் தண்தண்டலைக்

கூடு கெழீஇய குடி’

وو

பொருநர். 180-2

என்று முடத்தாமக் கண்ணியாரும், ஏணியும் எட்டா உயரத்தில் கூடு இருத்தலை,

66

'ஏணி எய்தா நீணெடு மார்பின்

முகடுதுமித் தடுக்கிய பழம்பல் லுணவிற்

என்று கடியலூர் உருத்திரங்கண்ணனாரும் கூறுவர்.

குமரி மூத்த கூடு

“ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்

நீரினும் நன்றதன் காப்பு”

பெரும் 245-7

- குறள். 1038

என்பது வள்ளுவம். உழுதல், எருவிடுதல், களை வெட்டுதல், நீர்ப்பாய்ச்சுதல், காவல்புரிதல் ஆகியவை ஒன்றின் ஒன்று உயர்வாகப் போற்றத் தக்கவை என்பது திருவள்ளுவர் கருத்து. ஆனால், இத் தகடூர் யாத்திரைப் பாடலாசிரியரோ,

66

களத்துப் போரெலாம் காவாது வைகுக

என்றார்.

وو

பயிரைக் காத்தல் கடமை; இன்றியமையாக் கடமை. நோய் நொடிகளாலும், தத்துப் பூச்சி வெட்டுக் கிளி முதலியவற்றாலும் ஆடு மாடுகளாலும் பிறவாற்றாலும் பயிர்க்குக் கேடுண்டாம் ஆகலின் நாடு காவல் ஒப்பக் காடு காவலும் கழனி காவலும் வேண்டுவனவே. ஆனால், களங்காவல் அத்தகைய தன்று.

‘கரவாலும்’ 'காரறிவாண்மையாலும்’ மாந்தர் களவு மேற்கொள்வர். அக் களவு உள்ளத்தால் உள்ளலும் தீது; ஆயினும் பிறன்பொருளைக் கள்ளத்தால் கொள்ள நினைத்தல் கயமையேயாம். அக்கயமை ஒழிந்த இல்லாத நாடே நாடு. அவ்வாறு ஒழித்து வாழ்ந்தவரே மாந்தர் ; அவ்வாறு ஒழிக்கும் நிலையில் நடாத்தப் பெறுவதே செங்கோல். ஆகலின்,

-

“அக்களத்துப் போரெலாம் காவாது வைகுக'

என்றார்.

99

-

காவல் வேண்டாமை எப்பொழுது உண்டாம்? கள்வார் இல்லையேல் காப்பார் இரார் என்க.