உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

“இசைநிலை நிறைய நிற்குவ வாயின் அசைநிலை வரையார் சீர்நிலை பெறலே"

- தொல். செய். 27

- யா. வி. 91. மேற்.

என்றார் தொல்காப்பியனார்.

“நேர்நிரை வரினே சீர்நிலை எய்தலும் பாவொடு பிறவும் ஆகும் ஒரோவழி”

என்றார் அவிநயனார்.

"நேரும் நிரையும் சீராய் வருதலும்

சீரும் தளையும் சிதைவுழிக் கொளலும் யாவரும் உணர்வர் யாவகைப் பாவினும்”

என்றார் மயேச்சுரர்.

15.

யா. வி. 91. மேற்.

முன்னே கூறப்பட்ட சீர்கள் செய்யுளுள் நிற்கும் முறை விரவியும் அருகியும் வேறும் ஒரோவழி

மருவியும் பெறாதும் வழங்குமன் அவையே.

‘என்பது என் நுதலிற்றோ?' எனின், அச்சீர் செய்யுளகத்து நிற்கும் முறைமை உணர்த்துதல் நுதலிற்று.

-

-

(இ-ள்) விரவியும் - (இயற்சீரும் உரிச்சீரும் செய்யுளகத்து) மயங்கியும், அருகியும் (பொதுச்சீர்) அருகியும், வேறும் (இயற்சீரும் உரிச்சீரும்) வேறுவேறே ஆகியும் (செய்யுளகத்து வரும்) ஒரோவழி மருவியும் - நிரையீறாகிய நாலசைப் பொதுச் சீர் எட்டும் வஞ்சிப்பாவினுள்ளே வரும்; பெறாதும்- வஞ்சியுரிச் சீர் வெண்பாவினுள் வரப்பெறாதும் 'வழங்குமன் அவையே- அவ்வாற்றால் நடைபெறும் முன் கூறப்பட்ட சீர்கள் என்றவாறு. "விரவியும் அருகியும் வேறும் ஒரோவழி

மருவியும் பெறாதும் வழங்குமன் அவையே”

என்றல்லது, 'இயற்சீரும் உரிச்சீரும் விரவியும் வரும்; பொதுச்சீர் அருகியும் வரும் ; இயற்சீரும் உரிச்சீரும் வேறு வேறாகியும் வரும் ; நிரையீறாகிய நாலசைப் பொதுச்சீர் வஞ்சியுள்ளே வரும் ; வஞ்சியுரிச்சீர் வெண்பாவினுள் வரப் பெறா. நேரீற்றியற்சீர் ஒத்தாழிசைக் கலிப்பாவுள்ளும், வஞ்சிப்பா வின் இறுதியினும் வரப்பெறா' என்று கூறிற்றிலரேனும், உரையிற்கோடல்' என்னும் உத்தியானும், ‘பிற நூன் முடிந்தது தானுடம்படுதல்' என்பதனாலும் இவ்வாறு உரைக்கப்பட்டது. 1. இதன்பின், ‘நேரீறாகிய தேமா புளிமா என்னும் இரண்டு இயற்சீரும் ஒத்தாழிசைக் கலிப்பாவிலும், தரவு தாழிசைகளுள்ளும் வரப்பெறா; வஞ்சியுள்ளும் இறுதிக்கண் பெரும்பான்மையும் வரப்பெறா' என்னுந் தொடர்கள் பழைய பதிப்பிற் காணப்படுகின்றன; எனினும் கிடைத்த ஏடுகளிற் காணப்படவில்லை என்பது இ. ப. கு.