உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

யாப்பருங்கலம்

'அசையே இரண்டும் மூன்றும் தம்முள் இசைய வருவன சீரெனப் படுமே; ஈரிரண் டாகியும் ஒரோவிடத் தியலும்

என்றார் பல்காயனார்.

66

“நாலசை யானும் நடைபெறும்; ஓரசை சீர்நிலை எய்தலும் சிலவிடத் துளவே' என்றார் காக்கைபாடினியார்,

"நாலசைச் சீரும் ஒரோவிடத் தியலும் பாவோடு பாவினம் 'பயிறல் இன்றி”

என்றார் அவிநயனார்.

ஓரசைச்சீரின் பெயரும் வகையும்

கச . ஓரசைச் சீருமஃதோரிரு வகைத்தே.

91

‘என்பது என் நுதலிற்றோ?' எனின், ‘ஓரசையினால் ஆகிய சீரும் பொதுச்சீர்’ ஆகும் என்று எய்துவித்தலும், அதனின் எண் உணர்த்துதலும் நுதலிற்று.

2

-

(இ-ள்.) ஓர் அசைச்சீரும் அஃது ஓர் அசையினான் ஆகிய சீரும் ‘அஃது' என்று மாட்டெறிந்தமையின் பொதுச் சீராம்; ஓர் இரு வகைத்தே - அது நேரசைச்சீரும் நிரையசைச் சீரும் என இரண்டு வகைப்படும் என்றவாறு.

(உ.ம்) நாள், மலர் என்பன.

இவை ஓரசைச்சீருக்கு உதாரணம் உரைத்தது, வெண்பாவின் இறுதி ஓசை ஊட்டுதற்பொருட்டு.

66

அவற்றிற்குச் செய்யுள் :

"பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயி றூறிய நீர்"

எனவும்,

“நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்

நெஞ்சத் தவலம் இலர்

- திருக்குறள். 1121.

திருக்குறள். 1072.

எனவும் இவற்றுள் நேரசையும் நிரையசையும் வந்தவாறு காண்க. என்னை?

1. கண்ணுற நிற்றல் இல்லாமல். 2. ஒரு நூற்பாவிற் கூறிய விதியை அதனை ஒத்த நூற்பாவிற்கும் இணைத்துக்கொள்ளும் ஓர் உத்தி (நன். 14).