உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

11. 'அனந்தசதுட்டயம் அவையெய்த 12. 2நனந்தலையுலகுடை 3நவைநீங்க

13. மந்தமாருதம் மருங்கசைப்ப

14. அந்தரதுந்துபி நின்றியம்ப

15. இலங்குசாமரை எழுந்தலமர 16. நலங்கிளர் பூமழை நனிசொரிதர

இனிதிருந்

தருள்நெறி நடாத்திய ஆதிதன்

4

திருவடி பரவுவதும் 'சித்தி பெறற் பொருட்டே”

திருப்பாமாலை. யா. வி. 95. மேற்

யா. கா. 9. மேற்.

க்குறளடி வஞ்சிப்பாவினுள் நாலசைச்சீர் பதினாறும் முதற்கண்ணே வந்தன. இவை பதினாறும் சிறப்பின்மையின், ‘பொதுச்சீர்' என்பது காரணக்குறி.

'பொது, சிறப்பின்மையைச் சொல்லுமோ?' எனின்,

சொல்லும், என்னை?

“புலமிக் கவரைப் புலமை தெரிதல்

புலமிக் கவர்க்கே புலனாம் - நலமிக்க

பூம்புனல் ஊர ! பொதுமக்கட் *காகாதே ;

  • பாம்பறியும் பாம்பின் கால்'

- பழமொழி. 5.

இதனுள் பொதுவைச் சிறப்பின்மைக்கட் புணர்த்தார் சான்றோர் ஆகலின்.

1.

பிறரும் நாலசைச்சீர் எடுத்தோதினார். என்னை?

“11 ஆம் அடியிலுள்ள அனந்தச துட்டயம் என்னும் சீரையும், 13 ஆம் அடியிலுள்ள ‘மந்தமாருதம்' என்னும் சீரையும், 15 ஆம் அடியிலுள்ள ‘இலங்குசாமரை' என்னும் சீரையும் முறையே அனந் - த- சதுட் – டயம், மந் – த- மா- த- மா- ருதம், இலங் கு- சா- மரை என அலகிட்டு, புளிமாநறுநிழல், தேமாந்தண்ணிழல், புளிமாந்தண்ணிழல் என்னும் வாய் பாடுகளாகக் கொள்க. சீர் பக்குவிட்டிசைப்புழியும் குற்றியலுகரம் இடையிட்டிசைப்புழியும் இங்ஙனம் அசையமைதி கொள்ளல் பண்டை வழக்கெனக் கொள்க.” இ. ப. கு.

அனந்த சதுட்டயம் (ஆன்மா நிருவாணதசையிலெய்தும்) அனந்த ஞானம் (கடையிலா அறிவு), அனந்த தரிசனம் (கடையிலாக் காட்சி,) அனந்த வீரியம் (கடையிலா வீரியம்). அனந்த சுகம் (கடையிலா இன்பம்) என்ப (சீவக. 2846 உரை). 2. அகன்ற இடம். 3. குற்றம். 4. சமணர் கூறும் முத்திநிலை.

(பா. வே) *காகாவாம். *பாம்பறியும் பாம்பின் கால்.