உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

66

வாராரே என்றென்று மாலைக்கண் நனிதுஞ்சாய்

ஊராரே என்றென்றும் ஒன்றொவ்வா உரைசொல்லி யார்யாரே என்றாளே யாய்”

என உரிச்சீரானே வெள்ளொத்தாழிசை வந்தது.

“குழிலிசைய வண்டினங்கள் கோழிலைய செங்காந்தட் குலைமேற் பாய அழலெரியின் மூழ்கினவால் அந்தோ அளிய' என் றயல்வாழ் மந்தி கழல்வனபோல் *நெஞ்சகைந்து கல்லருவி தூஉம்

நிழல்வரை நன்னாடன் நீப்பனோ அல்லன்.”

யா. வி. 67. மேற்.

யா. கா. 27. மேற்.

இவ் வெண்டுறையுள் இயற்சீரும் உரிச்சீரும் விரவி வந்தன.

766

'அங்குலியின் அவிரொளியால் 2அருண மாகி

அணியாழி மரகதத்தாற் பசுமை கூர்ந்து மங்கலஞ்சேர் 3நூபுரத்தால் அரவம் செய்யும் மலரடியை மடவன்ன மழலை ஓவாச் செங்கமல வனமென்று திகைத்த போழ்தில்

தேமொழியால்' தெருட்டுதியோ 'செலவி னாலோ

தொங்கலர்பூங் கருங்கூந்தல் °சுடிகை நெற்றிச் சுந்தரிநிற் பணிவார்க்கென் துணிவு தானே’

-

யா. வி. 94. மேற்.

இவ் வாசிரிய விருத்தத்துள் இயற்சீரும் உரிச்சீரும் விரவி வந்தன. பிற பாவினங்களுள்ளும் இயற்சீர் உரிச்சீர் விரவவும் பெறும்.

இனிப் பொதுச்சீர் பாவினத்துள் அருகி வருமாறு

“இருநெடுஞ் செஞ்சுடர் எஃகமொன் றேந்தி 'இரவில்வந்த அருநெடுங் காதற்கன் றேதரற் பாலதல் åலாதுவிட்டாற் கருநெடு மால்கடல் ஏந்திய கோன்கயல் 'சூடுநெற்றிப்

பெருநெடுங் குன்றம் விலையோ கருதிலெம் பெண்கொடிக்கே”

இக்கலித்துறையுள் நாலசைச்சீர் வந்தது.

"உரிமை யின்கண் இன்மையால்

அரிமதர் மழைக் கண்ணாள்

- யா. வி. 94. மேற்.

1. விரல். 2. சிவப்பு. 3. சிலம்பு. 4. தெளிவித்தாயோ. 5. நடையாலோ. 6. சுட்டி என்னும் அணிகலம். 7. புளிமாந்தண் பூ 8, 9. தேமாந்தண் பூ.

(பா. வே) *கலுழ்வனபோல். *நெஞ்சயர்ந்து.