உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

மேற் சூத்திரத்துள் (யா. வி. 15) ‘உரிச்சீரும் இயற்சீரும் விரவியும் வரப்பெறும் செய்யுளகத்து,' என்றதனால், இப் பொருள் முடிய வைத்துப் பெயர்த்தும் சூத்திரம் ஓதிய அதனால், 'கலியுள்ளும் ஆசிரியத்துள்ளும் வஞ்சி உரிச்சீர் வருகின்றுழி நிரை நடு இல்லாதன வருக,' என்பது பயன். எனவே, ‘நிரை நடு வாகிய 'கூவிளங்கனி, கருவிளங்கனி' என்னும் இரு சீரும்வாரற்க.' என்று விலக்கப்பட்டது ஆகலின், இதனை 'நியமச்சூத்திரம்' என்க. என்னை? முன் ஒன்றினால் முடிய வைத்துப் பின்னும் அதனையே எடுத்துக் கொண்டு விதிமுகத்தான் விலக்குவதூஉம், விலக்கும் வகையான் விதிப்பதூஉம் 'நியமச்சூத்திரம் ஆகலின். வரலாறு:

66

(தரவு)

‘புனற்படப்பைப் 'பூந்தாமரைப் போதுற்ற புதுநீருள் இனக்கெண்டை 3இரைதேரிய இருஞ்சிறைய மடநாரை கழுநீரும் குவளையுமங் கரும்பினொடு காய்நெல்லும் பழுநீருள் ஓடித்தேறும் பழனஞ்சூழ் ஊர ! கேள்:

(தாழிசை)

வடித்தடங்கண் பனிகூர வால்வளைத்தோள் பசப்பெய்தத் துடிக்கியையும் நுண்ணிடைவாய்த் துன்னாது துறப்பாயேல் 4பொடித்தகன்ற வனமுலையாள் புலம்பலும் புலம்பாளோ? "வண்டுற்ற நறுங்கோதை 'வால்வளைத் தோள் மெலிவெய்தப் பண்டுற்ற எழில்வாடப் °பரியாது துறப்பாயேல், உண்டுற்ற காதலின் உள்ளாகி இருப்பாளோ? 'வேய்தடுத்த மென்றோளும் மேனியும் விளர்ப்பெய்த நீவிடுத்தாங் 'கொண்பொருட்கே நீங்குதலை நினைப்பாயேல், ஆய்மலர்க்கண் பனிகூர ஆவியும் உள்ளாமோ?

66

‘எனவாங்கு,

(தனிச்சொல்)

(சுரிதகம்)

குவளை உண்கண் இவள்நலம் தொலைய

உறுபொருட் கெண்ணிய எண்ணம்

மறுபிறப் புண்டெனிற் பெறுக யாமே'

பாயிர உரையைப் பார்க்க

1.

2. பூந்

தா

3.

4.

6.

இரை

மரை = தேமாங்கனி.

தே - ரிய = புளிமாங்கனி.

வியர்த்து. 5. வெண்ணிற வளையல் (சங்கு வளையல்)

இரங்காது. 7. புகழ்வாய்ந்த பொருளுக்கு.