உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

105

இந் நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவினுள் “பூந்தாமரை’ எனவும், 'இரைதேரிய' எனவும் நேர்நடுவாகிய வஞ்சி உரிச்சீர்

வந்தது.

(நேரிசை ஆசிரியப்பா)

766

'மாரியொடு மலர்ந்த மாத்தாட் கொன்றைக்

கடிகமழ் புறவிற் 2கணவண் டார்க்கும்

3 யாணர்க் கோளூர் என்ப

பாணர் பாரம் தாங்கியோன் பதியே”

இவ் வாசிரியத்துள் 'மாரியொடு மலர்ந்த' என்புழித் 'தேமாங்கனி' என நேர் நடுவாகிய வஞ்சி உரிச்சீர் வந்தது. (நேரிசை ஆசிரியப்பா)

66

"நன்னாள் வேங்கைப் பொன்னேர் புதுமலர்

குறிஞ்சியொடு கமழும் குன்ற நாட! கடிபுனற் கோளூர் *அன்னவெம்

தொடிபொலி பணைத்தோள் *துறவா தீமே

இதனுட் 'குறிஞ்சியோடு கமழும்' என்புழிப் ‘புளிமாங் கனி' என நேர் நடுவாகிய வஞ்சி உரிச்சீர் வந்தது.

66

"வரைவிலவே' என்ற விதப்பால், ஆசிரியத்துள் இரண்டும் ஓரடியுட் பெரும்பான்மையும் வாரா; வரினும், இயற்சீர் இடையிட்டு நிற்கும்; அருகிக் கண்ணுற்று நிற்குமேனும் சிறப்பில. ‘வீங்குமணி விசித்த °விளங்குபுனை நெடுந்தேர்” யா. வி. 91. மேற். என்னும் ஆசிரியத்துள் இரு சீரும் ஓரடியுள்ளே 'விசித்த’ என்னும் இயற்சீர் இடையிட்டு வந்தது.

566

8

7“வண்டுகெழு திலகமொரு மாத்தொலைத்த’

என்னும் ஆசிரியத்துள் இரு சீரும் கண்ணுற்றவாறு காண்க.

'அகவல் கலியோடு' என்னாது, 'கலியினோடு அகவல்' என முறை பிறழ வைத்தமையால், கொச்சகக் கலிப்பாவினுள் நிரை நடுவாகிய வஞ்சி உரிச்சீர் அருகிவரினும், பெரிதும் சிறப்பில.

மணி

=

1. மா ரி. யொடு = தேமாங்கனி. 2. தொகுதியான வண்டு. 3. புதுவருவாய். 4. குறிஞ் - சி. யொடு = புளிமாங்கனி. 5. வீங் தேமாங்கனி 6. விளங் கு புனை புளிமாங்கனி. 7. வண் டு கெழு = தேமாங்கனி. 8. தில – க = க மொரு = புளிமாங்கனி.

கு

(பா. வே) *அன்ன. *துறவாய் நீயே.

=