உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கஎ.

4. தளை ஓத்து

தளையும் அதன் தொகையும்

சீரோடு சீர்தலைப் பெய்வது தளை; அவை ஏழென மொழிப இயல்புணர்ந் தோரே.

என்பது சூத்திரம்.

இவ்வோத்து என்ன பெயர்த்தோ?" எனின், தளை ஆமாறு உணர்த்திற்று ஆகலான், 'தளை ஓத்து' என்னும் பெயர்த்து.

'இச்சூத்திரம் என் நுதலிற்றோ?' எனின், பொது வகையால் தளை ஆமாறும், அவற்றது எண்ணும் உணர்த்துதல் நுதலிற்று. ள்). சீரொடு சீர் தலைப்பெய்வது தளை - ஒரு சீரோடு ஒரு சீர் ஏற்று நிற்பது ‘தளை' என்று சொல்லப்படும் ; அவை ஏழ் என மொழிப இயல்பு உணர்ந்தோரே அவைதாம் ஏழு வகைப்படும் என்று சொல்லுவார் நூல் முறை அறிந்தோர் என்றவாறு.

2

ஏழாவன, வெண் ளை இரண்டும், ஆசிரியத்தளை ரண்டும், கலித்தளை ஒன்றும், 3வஞ்சித்தளை இரண்டும், என. அவை போக்கித் தத்தம் இலக்கணச் சூத்திரத்துட் காட்டுதும். பிறரும்,

"செயற்குரி இருசீர் செய்யுள் நடப்புழித்

தலைப்பெய நிற்பது தளையெனப் படுமே”

என்றார் ஆகலின், 'சீரோடு சீர்தலைப் பெய்வது தளை”, என்று ஒருமை கூறி, ‘அவை ஏழென மொழிப, என்று எண்ணுழிப் பின்பு பன்மை கூறிய அதனால், தளை வழங்குகின்றுழி, நின்ற சீரின் ஈற்றசையும் வரும் சீரின் முதலசையும் தம்முள் 4ஒன்று தலும் 5ஒன்றாமையும் கொண்டு வழங்கப்படும். என்னை?

1. வெண்சீர் வெண்டளையும், இயற்சீர் வெண்டளையும். 2. நேரொன்று ஆசிரியத்தளையும், நிரையொன்று ஆசிரியத்தளையும். 3. ஒன்றிய வஞ்சித்தளையும். ஒன்றா வஞ்சித்தளையும் 4. நேரொன்றாசிரியத்தளை, நிரையொன்றாசிரியத்தளை, வெண்சீர்வெண்டளை, ஒன்றிய வஞ்சித்தளை. 5. இயற்சீர் வெண்டளை, கலித்தளை, ஒன்றாத வஞ்சித்தளை.