உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

யாப்பருங்கலம்

(குறள் வெண்பா)

'குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்

றுண்டாகச் செய்வான் வினை

111

திருக்குறள். 785

இது வெண்சீரோடு வெண்சீர் ஒன்றி வந்த சிறப்புடை

வெண்சீர் வெண்டளை.

(குறள் வெண்பா)

“கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும் இல்லாதாள் பெண்காமுற் றற்று

திருக்குறள். 402.

இ து வண்சீரோடு வேற்றுச்சீர் ஒன்றிய சிறப்பில்

வெண்சீர் வெண்ட ளை.

(குறள் வெண்பா)

"பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி

வாலெயி றூறிய நீர்

திருக்குறள். 1121.

இஃது இயற்சீர் நின்று இயற்சீரோடு விகற்பித்து வந்த சிறப்புடை இயற்சீர் வெண்டளை.

66

(குறள் வெண்பா)

இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு

நோய் நோக்கொன் றந்நோய் மருந்து

- திருக்குறள். 1091.

இஃது இயற்சீர் நின்று வேற்றுச் சீரோடு விகற்பித்து வந்த சிறப்பில் இயற்சீர் வெண்டளை.

66

(நேரிசை வெண்பா)

சிலைவிலங்கு நீள்புருவம் சென்றொசிய நோக்கி முலைவிலங்கிற் றென்று முனிவாள் - மலைவிலங்கு தார்மாலை மார்ப ! தனிமை பொறுக்குமோ கார்மாலை கண்கூடும் போழ்து

இதனுள் வெண்டளை எல்லாம் வந்தன.

ஆசிரியத்தளை

ககூ. ஈரசைச் சீர்நின் றினிவரும் சீரோடு

நேரசை ஒன்றல் நிரையசை ஒன்றலென் றயிரு வகைத்தே ஆசிரி யத்தளை.

-தண்டியலங்காரம் 16. மேற்.

யா.வி.37,60 மேற்

யா.கா.11.471. மேற்.

(உ)

‘என்பது என் நுதலிற்றோ? எனின், ஆசிரியத்தளை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.