உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

-

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

இ- ள்.) ஈரசைச் சீர் நின்று இனி வரும் சீரோடு நேர் அசை ஒன்றல் இயற்சீர் நின்று வரும் சீர் முதலசையொடு நேரசை ஒன்றுவதூஉம், நிரை அசை ஒன்றல் என்று - நிரையசையாய் ஒன்றுவதூஉம் என்று, ஆயிரு வகைத்தே ஆசிரியத்தளை ஆசிரியத்தளை அவ்விரண்டு வகைப்படும் என்றவாறு.

'இனி வரும் சீர்’ என்று சிறப்பித்த அதனால், வரும் சீரும் இயற்சீரே வந்து ஒன்றுவது சிறப்புடைத்து. வரும் சீர் யாதானும் ஆகப்பெறும்.

வரலாறு :

(நேரிசை ஆசிரியப்பா)

“உள்ளார் கொல்லோ தோழி! முள்ளுடை

அலங்குகுலை ஈந்தின் சிலம்பிபொதி செங்காய்

துகில்பொதி பவளம் ஏய்க்கும்

அகில்படு கள்ளியங் காடிறந் தோரே”

-

ஐங்குறுநூறு. தனிப். 2

இஃது 'ஈரசைச்சீர் நின்று ஈரசைச்சீரோடு ஒன்றிய ப

சிறப்புடை ஆசிரிய நேர்த்தளை.

"திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி”

புறநானூறு. 2.

இஃது ஈரசைச்சீர் நின்று வேற்றுச்சீரோடு ஒன்றிய சிறப்பில் ஆசிரிய நேர்த்தளை.

266

(நேரிசை ஆசிரியப்பா)

“திருமழை தலைஇய இருள்நிற விசும்பின்

விண்ணதிர் *இமிழிசை முழங்கப்

பண்ணமைந் தவர்தேர் சென்ற வாறே

""

இஃது ஈரசைச்சீர் நின்று ஈரசைச்சீரோடு ஒன்றிய சிறப்புடை ஆசிரிய நிரைத்தளை.

366

(வெண்செந்துறை)

ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்

ஓதலிற் சிறந்தன் றொழுக்கம் உடைமை

- முதுமொழிக் காஞ்சி 1

இஃது ஈரசைச்சீர் நின்று வேற்றுச்சீரோடு ஒன்றிய

சிறப்பில் ஆசிரியத்தளை. என்னை?

1. “ஈரசை நாற்சீர் அகவற் குரிய”

2. இதன் முதலிரண்டடிகள் மலைபடுகடாம் 1-2. 3. கடல்.

(பா. வே) *இமிழின்