உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

யாப்பருங்கலம்

“ஈரசை இயற்சீர் ஒன்றிய தெல்லாம்

ஆசிரி யத்தளை என்மனார் புலவர்"

என்றார் மயேச்சுரர்.

“ஈரசை இயற்சீர் ஒன்றிய நிலைமை

ஆசிரி யத்தளை ஆகும் என்ப

என்றார் பிறரும் ஆகலின். பிறவும் அன்ன.

கலித்தளை

உ0. நிரையீ றில்லா உரிச்சீர் முன்னர்

நிரைவருங் காலைக் கலித்தளை ஆகும்.

113

(சிறுகாக்கை பாடினியார்)

(151)

'என்பது என் நுதலிற்றோ?" எனின், கலித்தளை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

-

இ-ள்). 'நிரை ஈறு இல்லா, உரிச்சீர் முன்னர் - நேர் ஈறாகிய உரிச்சீர் முன்னர், நிரை வரும் காலைக் கலித்தளை ஆகும் நிரையசை வரும் சீருக்கு முதலாய் வரின் கலித்தளை ஆகும் என்றவாறு.

“நிரையீ றில்லா உரிச்சீர் முன்னர் நிரை வரிற் கலித்தளை யாகும்,' என்னாது, என்னாது, "நிரை வருங் காலை' என்று மிகுத்துச் சொல்லிய அதனால், ‘வரும் சீரும் நேரீற்று உரிச்சீரேயாவது சிறப்புடைத்து, பிற சீர் வரப்பெறுமாயினும்', எனக் கொள்க.

வரலாறு:

2

“செல்வப்போர்க் கதக்கண்ணன் 3செயிர்த்தெறிந்த ‘சினவாழி”

- யா. வி. 32. 78. 86. மேற்.

என்பது, நேரீற்று உரிச்சீர் நின்று நேரீற்று உரிச்சீரோடு ஒன்றாது வந்த சிறப்புடைக் கலித்தளை.

66

“முற்றொட்டு 5மறவினை முறைமையான் முயலாதார்’

யா. வி. 78. மேற்.

என்பது, நேரீற்று உரிச்சீர் நின்று பிற சீரோடு ஒன்றாது வந்த சிறப்பில் கலித்தளை.

66

"இயற்சீர் ஆசிரிய உரிச்சீர் என்று வழங்கவும் பெறும்', என்று உரைக்கப்பட்டது ஆகலின், நிரையீறு இல்லாத் 'தேமா, புளிமா' என்னும் இரண்டு ஆசிரிய உரிச்சீர்முன் நிரையசை

1. நிரை ஈறு இல்லாமையாவது நேர் ஈறு உடைமை.

2.

தேமாங்காய் முன் புளிமாங்காய் 3. புளிமாங்காய் முன் கருவிளங்காய். 4. கருவிளங் காய்முன் புளிமாங்காய். 5. தேமாங்காய் முன் கருவிளம்.