உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

முதலாகிய சீர் வரினும் கலித்தளையேயாம், 'பிற’, எனின், ஆகாது. ‘ஈரசை கூடிய சீரியற்சீர்', என்று எடுத்து ஓதினமை யானும், ஆண்டு 'இயற்சீர் ஆசிரிய உரிச்சீர் என்று வழங்கப் படும்', என்று பிறர் மதம் சொன்னமையானும், 'இயற்சீர் விகற்பம் வெண்டளை ஆகும்', என்று எடுத்து ஓதிப் போந்தமை யானும், எனின், அது பொருந்தாது. நிரையீறாகிய 'கூவிளம், ‘கருவிளம்' என்னும் சீர் நின்று வரும் சீரோடு விகற்பித்தவழி வெண்டளைக்கு இடமாகும் ஆதலான், 'இயற்சீர் விகற்பம் வெண்டளை ஆகும்', என்பது பழுதாகாது, 'தேமா, புளிமா, என்னும் இரண்டு ஆசிரிய உரிச்சீர்ப்பின் நிரைவரினும் 'கலித் தளை ஆதல் வேண்டும்', என்று கடாவினால், அச்சீர் கலிக்குச் சிறப்பில்லாமையானும், பிற நூலுள் இவ்வாறு சொல்லாமை

யானும்,

'பல்பொருட் கேற்பின் நல்லது கோடல்"

தொல். மரபு. 111

என்பது தந்திர உத்தி ஆகலானும், ஈண்டு நேரீறாகிய மூவகைச்சீர் நின்று ஒன்றாததுவே கலித்தளை என்று கொள்ளப்படுவது எனக் கொள்க.

(நேரிசை வெண்பா)

“ஈரசைச்சீர் தாமுரிய 'ஆசிரியக் கென்றமையான் நேரீற் றியற்பின் நிரைவருங்கால்- ஓரும் கலித்தளையாம் என்னினக வற்சீர் கலியின் ஒலிக்கியையா என்றுரைக்கும் ஓத்து”

இதனை விரித்து உரைத்துக் கொள்க.

வஞ்சித்தளை

உக. தன்சீர் இறுதி நிரையொடு நேர்வரின்

வஞ்சித் தளையின் வகையிரண் டாகும்.

(ச)

என்பது என் நுதலிற்றோ?' எனின், வஞ்சித்தளை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ-ள்). தன் சீர் இறுதி - வஞ்சியுரிச்சீரின் இறுதி, நிரை யொடு நேர் வரின் - வரும் சீர் முதலசை நிரையசையாய் வரவும்

1 ஆசிரியப் பாவிற்கு. 2. அகவற்சீர் கலியின் ஒலிக்கியையா; கலி, துள்ளல் ஓசையுடைய தாகலின் நேரீற்று இயற்சீர் ஒலி கலிக்குப் பொருந்தா என்றார். 'மாஞ்சீர் கலியுட் புகா’ என்பது (யா. கா. 38) நோக்குக.