உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

115

நேரசையாய் வரவும், வஞ்சித்தளையின் வகை இரண்டு ஆகும் - வஞ்சித்தளை இரண்டு வகைப்படும் என்றவாறு.

66

“வஞ்சித்தளை இரண்டாகும்’, என்னாது, ‘வஞ்சித் தளை யின் வகை இரண்டாகும்,' என்ற விதப்பினால், 'வரும் சீரும் வஞ்சி உரிச்சீராய் வருவது சிறப்புடைத்து, பிற சீரும் வரு மாயினும்', எனக் கொள்க.

‘பூந்தாமரைப் போதலமர’ (யா. வி. 15. மேற்.) என்னும் பாட்டினுள் முதல் இரண்டடியும் வஞ்சியுரிச்சீர் நின்று வஞ்சி யுரிச்சீரோடு ஒன்றாது வந்த சிறப்புடை வஞ்சித்தளை; அல்லன, ஒன்றி வந்த சிறப்புடை வஞ்சித்தளை.

(குறளடி வஞ்சிப்பா)

1“மந்தாநிலம் *மருங்க சைப்ப

வெண்சாமரை புடைபெயர்தரச்

செந்தாமரை நாண்மலர் மிசை

எனவாங்கு,

இனிதின் ஒதுங்கிய *இறைவனை

மனமொழி மெய்களின் வணங்குதும் மகிழ்ந்தே”

-

- திருப்பாமாலை.

6

எனவும்,

(குறளடி வஞ்சிப்பா)

யா. கா. 11. 21

"புனல்பொழிவன சுனையெல்லாம்;

பூநாறுவ புறவெல்லாம்;

வரைமூடுவ மஞ்செல்லாம்;

தேனாறுவ பொழிலெல்லாம்;

எனவாங்கு,

நாறுகுழற் கொடிச்சியர் தம்மலைச்

சீறூர் வாழிய செல்வமொடு பெரிதே !"

6 எனவும் இவற்றுள் வஞ்சியுரிச்சீர் நின்று வேற்றுச்சீரோடு 2ஒன்றியும் 3ஒன்றாதும் வந்த சிறப்பில் வஞ்சித்தளை இரண்டும் வந்தவாறு கண்டுகொள்க.

1. தென்றல். இப்பாடலின் முதலிரண்டடிகளில் ஒன்றிய வஞ்சித் தளையும் மூன்றாமடியில் ஒன்றாத வஞ்சித்தளையும் வந்துள்ளன.

2.

23

3.

ஒன்றிவந்தவை முதல், இரண்டு, நான்காம் அடிகள்; ஒன்றிய வஞ்சித்தளை.

ஒன்றாது வந்தது இரண்டாமடி; ஒன்றாத வஞ்சித்தளை.

(பா. வே) *வந்தசைப்ப. *அருகன்.