உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

"தன்சீர் இறுதி நிரையொடு நேர்வரின் வஞ்சித் தளை யாம்,' என்றமையால், வரும் சீர் நிரையும் நேரும் ஒருங்கு நின்று, ‘புளிமா' என்னும் சீராய் வரின் அல்லது வஞ்சித்தளை ஆகாது, ‘பிற’, எனின், அற்றன்று, ‘வஞ்சித் தளையின் வகையிரண் ாகும்' என்று எண்ணி விரித்து உரைத்தமையால், வரும் சீர் நிரை முதலாய் வரினும் நேர் முதலாய் வரினும் வஞ்சித் தளையாம் என்பது. எனவே நிரையும் நேரும் முதலாகிய எல்லாச் சீரினையும் உடன் கொண்டு பிற நூலொடு மாறுகொள்ளாது நிற்கும் எனக் கொள்க. அல்லதூஉம்,

"இருவகை உகரமோ டியைந்தவை வரினே நேர்பும் நிரைபும் ஆகும் என்ப

தொல் . செய். 4

என்பது, 'நேர்க்கீழ்க் குற்றியலுகரமும் முற்றியலுகரமும்’ வந்தது, நுங்கு நுங்கினார்,' என்றாற்போல ஒருங்கு வரின் நேர்பு அசையாம்,' நிரைக்கீழ்க் குற்றியலுகரமும் முற்றியலுகரமும் வந்தது, ‘நுழைந்து புக்கார், என்றாற்போல ‘ஒருங்கு வரின் நிரைபு அசையாம்,' என்பது அன்று. நேர்க்கீழ்க் குற்றியலுகரம் வரினும் முற்றியலுகரம் வரினும் நேர்பு அசையாம்; நிரைக்கீழ்க் குற்றிய லுகரம் வரினும் முற்றியலுகரம் வரினும் நிரைபு அசையாம் என்றார் செய்யுளியலுடையார்; அதுபோலக் கொள்க.

“வஞ்சித் தளைவகை வரைவின் றாகும்"

என்றாற்போலத்,

66

தன்சீர் இறுதி நிரையொடு நேர்வரின் வஞ்சித்தளை இரண்டாகும்

என்று தொகுத்துச் சொன்னாலும், குறித்த பொருளைக் கொண்டு நிற்கும்.

‘வஞ்சித் தளையின் வகையிரண்டாகும்”

'என்று விரித்துச் சொல்ல வேண்டியது என்னை?' எனின், தளை வழங்குகின்றுழி நேர் ஈறாகிய நாலசைப் பொதுச்சீரை வெண்பா உரிச்சீரே போலக் கொண்டு, வரும் சீர் முதல் அசையோடு ஒன்றியது வெண்டளையாகவும், ஒன்றாதது கலித்தளையாகவும்; நிரையீறாகிய நாலசைப் பொதுச் சீரை வஞ்சியுரிச்சீரே போலக் கொண்டு, வரும் சீர் முதல் அசையோடு ஒன்றினும் ஒன்றாவிடினும் வஞ்சித்தளை யாகவும்; ஓரசைப் பொதுச்சீரை இயற்சீரே போலக் கொண்டு, வரும் சீர் முதல் அசையோடு ஒன்றியது ஆசிரியத் தளையாகவும் ஒன்றாதது வெண்டளையாகவும் கொண்டு வழங்கப்படும் என்பது அறிவித்தற்கு வேண்டப் பட்டது ; ‘விதப்புக் கிளவி வேண்டியது விளைக்கும்,' என்ப து, ஆகலின்.