உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

(கட்டளைக் கலித்துறை)

"தேமா புளிமா கருவிளம் கூவிளஞ் சீரகவற் காமாங் கடைகா யடையின் வெண் பாவிற்கந் தங்கனியா வாமாண் கலையல்குல் மாதே ! வகுத்தவஞ் சிக்குரிச்சீர் நாமாண் புரைத்த அசைச்சீர்க் குதாரணம் நாள்மலரே'

66

99

"தண்ணிழல் தண்பூ நறும்பூ நறுநிழல் தந்துறழ்ந்தால் எண்ணிரு நாலசைச் சீர்வந்த தருகும்; இனியவற்றுட் கண்ணிய பூவினம் காய்ச்சீர் அனைய; கனியோடொக்கும் ஒண்ணிழற் சீர் ; அசைச் சீரியற் சீரொக்கும் ஒண்டளைக்கே’

இவற்றை விரித்து உரைத்துக் கொள்க.

117

-யா. கா. 7,8.

பிறரும்,

(நேரிசை வெண்பா)

"நேரிற நேர்வரின் வெண்டளை யாகுமந் நேரிற்ற சீர்ப்பின் நிரைவரின் - ஓரும்

கலித்தளையாம் பால்வகையால் வஞ்சித் தளையாம் நிரைவரினும் நாலசைச்சீர்க் கண்

எனவும்,

"உரிச்சீர்த் தளைவகைக் கெய்தும் பெயரே நிரைநேர் இறுதி நாலசைச் சீர்க்கண்”

எனவும்,

6

“ஓரசைப் பொதுச்சீர் தளைவகை தெரியின் ஈரசைச் சீர்த்தளைக் கெய்தும் பெயரே

எனவும்,

66

ஓரசைப் பொதுச்சீர் ஒன்றா தாயின்

வெண்டளை; ஒன்றிய தாசிரியத் தளையே” எனவும் சொன்னாரும் உளரெனக் கொள்க.

“அங்கண்வானத் தமரரரசரும்”

என்னும் பாட்டினுள்,

166

“வெங்களியானை வேல்வேந்தரும்

وو

- திருப்பாமாலை.

யா. வி. 13. மேற்.

யா. கா. 9. மேற்.

என நேரீற்று நாலசைச்சீர் நின்று, வரும் சீர் முதலசையோடு ஒன்றினமையின், வெண்டளை.

1. கூவிளந்தண்பூ.