உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

(ஆசிரிய அடியுள் தளை மயக்கம்)

121

வி

ஆசிரிய அடியுள் வெண்டளையும் ஆசிரியத் தளையும் விரவி நிற்றலும் கலித்தளையும் ஆசிரியத்தளையும் விரவி நிற்றலும், வெண்டளையும் கலித்தளையும் ஆசிரியத்தளையும் விரவி நிற்றலும், வெண்டளையும், கலித்தளையும் விரவி நிற்றலும், வெண்டளையே வருதலும், கலித்தளையே வருதலும், வெண்டளையும் வஞ்சித்தளையும் விரவி நிற்றலும், வஞ்சித் தளையும் ஆசிரியத் தளையும் விரவி நிற்றலும் வஞ்சித்தளையும் கலித்தளையும் விரவி நிற்றலும், வஞ்சித் தளையும் ஆசிரியத் தளையும் கலித்தளையும் விரவி நிற்றலும், வஞ்சித் தளையும் வெண்டளையும் ஆசிரியத்தளையும் விரவி நிற்றலும் உரிய என்றிவற்றாற் பல பட விகற்பித்தும்;

(கலி அடியுள் தளை மயக்கம்)

கலி அடியுள் தன் தளையும் ஆசிரியத்தளையும் விரவி நிற்றலும், தன் தளையும் வெண்டளையும் விரவி நிற்றலும், தன் தளையும் ஆசிரியத்தளையும் வெண்டளையும் விரவி நிற்றலும், வெண்டளையே வருதலும், ஆசிரியத்தளையே வருதலும், வஞ்சித்தளையும் தன் தளையும் விரவி நிற்றலும், வஞ்சித் தளையும் ஆசிரியத் தளையும் விரவி நிற்றலும், வஞ்சித் தளையும் வெண்டளையும் விரவி நிற்றலும், வஞ்சித் தளையும் தன் தளையும் ஆசிரியத்தளையும் விரவி நிற்றலும், வஞ்சித் தளையும் தன் தளையும் வெண்டளையும் விரவி நிற்றலும், வஞ்சித் தளையும் வெண்டளையும் ஆசிரியத்தளையும் விரவி நிற்றலும், வஞ்சித் தளையே வருதலும் என்றிவற்றாற் பல பட விகற்பித்தும்;

(வஞ்சி அடியுள் தளை மயக்கம்)

வஞ்சி அடியுள் வெண்டளையே வருதலும், ஆசிரியத் தளையே வருதலும், கலித்தளையே வருதலும், முச்சீரடி வஞ்சி யுள்ள தன்தளையும் வெண்டளையும் வருதலும், ஆசிரியத் தளையும் தன் தளையும் வருதலும், கலித்தளையும் தன் தளையும் வருதலும், வெண்டளையும் ஆசிரியத்தளையும் வருதலும், வெண்டளையும் கலித்தளையும் வருதலும், கலித்தளையும் ஆசிரியத்தளையும் வருதலும் உரிய என்றிவற்றாற் பொது வகையாற் கூறிச் சிறப்புடைத் தளையானும் சிறப்பில் தளை யானும் இவ்வாறு மயக்கம் சொல்ல எல்லாம் இரட்டியாம் என்று, இவ்வாறு இருதளையும் மயங்கி நிற்ப, பல வேறு வகைப்பட்ட தளைமயக்கமாம் என்று இலக்கியப்பன்மை நோக்கி விகற்பித்து விரித்துக் கூறினார் ஒருசார் ஆசிரியரேனும்,