உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. அடி ஓத்து

அடியின் வகை

23. குறளடி சிந்தடி அளவடி நெடிலடி

கழிநெடில் அடியெனக் கட்டுரைத் தனரே.

வ்வோத்து என்ன பெயர்த்தோ?' எனின், தளையினான்

அடி ஆமாறும், அடிப் பெயரும், அடிக்கு உரிமையும், அடி மயக்கமும், அடி வரையறையும் ஆமாறும் உணர்த்திற்று ஆதலான் ‘அடி ஓத்து' என்னும் பெயர்த்து.

“இச்சூத்திரம் என் நுதலிற்றோ?' எனின், ஒருசார் ஆசிரியர் வேண்டும் அடிகளது பெயர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று.

இ.ள்) குறளடியும் சிந்தடியும் அளவடியும் நெடிலடியும் 'கழிநெடிலயும் என இவ்வைந்து திறத்தன அடி என்று உரைத்தார் ஒருசார் தொல்லாசிரியர் என்றவாறு.

இப்பொருளைச் சொல்லுமோ இச்சூத்திரத்துள் தொடர் மொழி?' எனின், சொல்லும். என்னை? ‘குறளடி சிந்தடி அளவடி நெடிலடி கழிநெடிலடி' என்பது உம்மைத்தொகை ஆதலின், எண்ணும்மை வாசகம்பட விரித்து உரைக்கப்பட்டது. “ஐந்து திறத்தன' என்பது, அச்சொன்ன அடி ஐந்தே ; ஆகலின் ‘ஐந்து' என்பது போந்த பொருள்.

66

யா. வி. 39.

கடையிணை, பின்முரண் இடைப்புணர் முரண் என்னும் சூத்திரத்துணின்றும் '2சார்ச்சி வழி ஒழுகுதல்' என்னும் அதிகார முறைமையால் 'ஒருசார் ஆசிரியர்' என்பது கொணர்ந்து உரைக்கப்பட்டது, வடநூலுள்ளும், 3ஞாபகத் தானும் விருத்தியானும் அதிகாரம் என்று 4சேண்வயிற் காணர்ந்து உ உரைக்கப்படும் ஆகலின், அல்லதூஉம், பல்காயனார் முதலாகிய ஒருசார் ஆசிரியர் எடுத்து ஓதிற்றிலர் ஆதலின், அது வலிந்து உரைக்கப்பட்டது எனவும் அமையும். இது சார்புநூல் ஆகலின், அப்படி விகற்பம் ஓதினார் காக்கை

1. மிகுதி. 2. தொடர்பு. 3. குறிப்பாலும். 4.தொலைவிலிருந்து கொண்டுவந்து.