உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

வெண்பா ஒழித்துத் தளைவிரவும் ; செய்யுளாம் வெண்பாக் கலியுட் புகும்"

எனவும்,

'வெள்ளை ஒழித்தல் பாவொடு பாவினம்

சொல்லிய தளைசீர் வரைவில விரவும்”

எனவும் சொன்னார் பிறரும் எனக் கொள்க. (நேரிசை வெண்பா)

“நின்றசீர் ஈறும் வருஞ்சீர் முதலசையும்

ஒன்றியும் ஒன்றாதும் ஓசைகொள - நின்றால் வளையொன்று முன்கையாய் ! வந்ததனை வல்லோர்

தளையென்று கட்டுரைப்பார் தாம்

“அதிகண்டம் என்றும் இசையென்றும் சீரைப்

பதச்சேதம் என்றும் பகர்வர்; பதச்சேதம்

சந்தித் ததனைத் தளையென்பர் ; அத்தளையைப்

பந்தமென் பாரும் பலர்”

இவற்றை விரித்துரைத்துக் கொள்க.

தளை ஓத்து முடிந்தது.

127

(நாலடி நாற்பது)

யா. வி 32. மேற்.

(சு)