உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

தனுள் ‘கொள்ளும்புட் காக்கின்ற' என்புழிச் செப்ப லோசை கொள்ளுமாறு போலாது, 'கோயின்மையோ' என்புழி வஞ்சியுரிச்சீர் வந்து, வஞ்சித்தளை தட்டுச் செப்பலோசை வழுவிக்கிடந்தவாறும், வகையுளி சேர்த்தல் ஆகாதவாறும், உதாரண வாய்பாட்டால் ஓசை ஊட்டினும் உண்ணாதவாறும் கண்டுகொள்க. 'அல்லதூஉம், சான்றோர் செய்யுளுள்ளும் வஞ்சித்தளையும் வேற்றுத்தளையும் வந்த வெண்பா இல்லை போலும் எனக் கொள்க.

66

(குறட்டாழிசை)

“வளக்கு ளக்கரை மாநீலம் கொய்வாட் களக்க லாகுமோ அன்பு?"

இதனுள் ஆசிரியத்தளை தட்டுச் செப்பலோசை வழுவிற்று. பிறவும் இவ்வாறு பிறழ்ந்தன கண்டுகொள்க.

(கட்டளைக் கலித்துறை)

“மாஞ்சீர் கலியுட் புகா ; கலிப் பாவின் விளங்கனிவந் தாஞ்சீர் அடையா; அகவல் அகத்துமல் லாதவெல்லாம் தாஞ்சீர் மயங்கும் ; தளையுமதே ; வெள்ளைத் தன்மைகுன்றிப் போஞ்சீர் கனிபுகிற் புல்லா தயற்றளை பூங்கொடியே!”

தனை விரித்து உரைத்துக்கொள்க.

1.

(நேரிசை வெண்பா)

“சீர்வண்ணம் வெள்ளைக் கலிவிரவும் ; வஞ்சியுள் ஊருங் கலிப்பாச் சிறுச்சிறிதே - பாவினும்

கோயின்மையோ என்பதை கோ யின்

-

யா.கா.38

மை யோ என அலகிட்டுத் தேமாந்தண்பூ என வாய்பாடு கூறிப் பூச்சீரெல்லாம் காய்ச்சீர் இயல என்பார் உளராயினும் எனக்கருதி “அல்லதூஉம் இல்லை போலும் எனக்கொள்க” என்றார். அன்றியும் இன்மை என்பதிலுள்ள னகரஒற்றை நீக்கி இமை என்றாக்கிக் கூவிளங்காயாகக் கொள்வர். (எ - டு) "தாளின்மறுத் தான்கண்டு' (நளவெண்பா). “இத்தொடக்கத்து ஒருசார் வெண்பாவினுள் வஞ்சியுரிச்சீர் வந்தனவாலோ எனின் திருவள்ளுவப் பயன், நாலடி நானூறு முதலாகிய கீழ்க்கணக்குள்ளும் முத்தொள்ளாயிரம் முதலாகிய பிறசான்றோர் செய்யுளுள்ளும் வஞ்சியுரிச்சீர் வாராமையாலும், வெண்பாவினுள் வஞ்சியுரிச்சீர் வருக என்னும் ஒத்தில்லாமையாலும் வேற்றுத்தளை வெண்பாவினுள் விரவாமையாலும் இத் தொடக்கத்தன குற்றமல்லது குணமாகாவென்பது காக்கைபாடினியார் முதலாகிய தொல்லாசிரியர் துணிவு ; இதுவே இந்நூலுடையார்க்கும் உடன்பாடு' என்னும் யா. கா. உரைப்பகுதி இவண் நோக்கத்தக்கது.